இந்தியாவில் பாகிஸ்தான் அமைச்சர் நடனமாடுவதாக பரவும் வீடியோ!

Published On:

| By Monisha

பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டின் தொடக்க விழாவில் நடனமாடுவதாக வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 2001 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் ரஷ்யா, சீனா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

ஈரான், ஆப்கானிஸ்தான், பெலாரஸ், மங்கோலியா ஆகிய நாடுகள் பார்வையாளர்களாக உள்ளன.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் 2 நாள் மாநாடு நேற்று (மே 4) கோவாவில் தொடங்கியது.

இந்த மாநாட்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அலுவல் மொழியாக ரஷ்ய மொழியும், சீனாவின் மாண்டரின் மொழியும் உள்ளன.

இந்த அமைப்பு தொடர்பான அனைத்து ஆவணங்களும் ரஷ்ய மொழி, மாண்டரின் மொழிகளில் மட்டுமே உள்ளன.

இந்த சூழலில் ஆங்கிலத்தையும் அலுவல் மொழியாக மாற்ற வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது.

வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் இந்த கருத்து மீண்டும் வலியுறுத்தப்பட இருக்கிறது.

தற்போது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளிடையே டாலர் கரன்சியில் பணப் பரிமாற்றம் நடைபெற்று வருகிறது.

இதற்குப் பதிலாக அந்தந்த நாடுகளின் கரன்சிகளில் பணப் பரிமாற்றத்தை மேற்கொள்வது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது.

இதனிடையே, இந்த மாநாட்டில் கலந்து கொள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி நேற்று கராச்சியில் இருந்து ராணுவ விமானத்தில் கோவாவிற்கு வந்தார்.

ராணுவ விமானத்தில் பறந்து இந்தியா வந்த அவர்,

“ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை சந்தித்துப் பேச ஆவலாக இருக்கிறேன்” என்று ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.

12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு வருகை தரும் பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி தான்.

கடந்த 2011 ஆண்டு அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரபானி இந்தியாவிற்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் இந்தியாவிற்கு வந்தது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில்,

பிலாவல் பூட்டோ ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டின் தொடக்க விழாவில் நடனமாடுவதாக வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/Sidha_memer/status/1654015484881403905?s=20

இந்த வீடியோவை பார்த்த பலரும் அது பிலாவல் பூட்டோ கிடையாது என்று கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

மோனிஷா

சரத்பவார் பதவி விலகல்: ஸ்டாலின் வேண்டுகோள்!

திமுக – மார்க்சிஸ்ட்:  அனல் பறந்த வாக்குவாதம் முடிவுக்கு வந்ததா? 

dance video of pakistan minister
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share