பெண்கள் தங்களை உயரமாகக் காட்ட ஹீல்ஸ் அணிய வேண்டியது தவிர்க்க முடியாததாகிவிட்டது. ஹீல்ஸ் உள்ள செருப்புகளின் உயரம், அவர்களின் வேலைவாய்ப்பு, சமூக அந்தஸ்து என்று பல காரணிகளின் அளவைத் தீர்மானிக்கிறது.
இந்த நிலையில் அழகாகக் காட்டுவதற்காக, அதிக உயரம் உள்ள ஹீல்ஸ் காலணி அணிவதால், உடல்நலம் எந்த அளவுக்குப் பாதிப்புக்கு உள்ளாகும் என்கிறார்கள் எலும்பியல் மருத்துவர்கள்.
”நடிகைகள், மாடல்கள் உயரத்தைக் கூட்டுவதற்காக பாயின்டட், பென்சில் ஹீல்ஸ்களை அணிகின்றனர். ஆனால், தற்போது, பத்து வயது நிரம்பும் பெண் குழந்தைகள்கூட ஹீல்ஸ் போடுகிறார்கள்.
பாயின்டட் ஹீல்ஸ் மற்றும் பென்சில் ஹீல்ஸைத் தொடர்ந்து அணியும்போது, உடல் எடையைத் தாங்கி நிற்கும் பாதத்திலும், குதிகாலிலும் வலி ஏற்படும். இடுப்பு மற்றும் பின்பக்கத்தில் சதை போடும்.
இந்த நிலையில் திருமணம், பார்ட்டி போன்ற விசேஷங்களுக்குப் போகும்போது ஹீல் உயரம் ஒன்றரை இன்சுக்கு மேல் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதுவும், பத்து நாட்களுக்கு ஒரு முறை சிறிது நேரம் அணிந்தால் காலுக்குப் பாதிப்பு எதுவும் ஏற்படாது.
பெரிய ஹீல்ஸ் அணிந்து மணிக்கணக்கில் நின்று பணிபுரிபவர்களுக்குக் கால் பெருவிரலில் வீக்கம் (Bunion) ஏற்படும்.
ஒருகட்டத்தில் காலின் வடிவமே மாறிவிடும். அதிக நேரம் நின்று பணிபுரிபவர்கள், ஸ்போர்ட்ஸ் ஷூ அணிவது நல்லது. இல்லை எனில் அவஸ்தைப்பட வேண்டியிருக்கும்.
சிலருக்குப் பாதங்களில் அதிகமாக வியர்க்கும். அவர்கள் ஷூ, செருப்பு அணிவதற்கு முன்பு காட்டன் சாக்ஸ் அணியலாம்.
வியர்வையைக் காட்டன் உறிந்துகொள்ளும். காட்டன் அடுக்கு ஒன்று சேர்த்தே செருப்புகள் விற்கின்றனர். அது உங்கள் காலுக்குப் பொருந்தினால் வாங்கலாம்.
அதிக எடை உள்ள செருப்பை அணிந்தால், கால் வலி, காய்ப்பு வரும். அதிக எடை இல்லாத செருப்பை அணியுங்கள். வேலைக்குத் தகுந்த மாதிரியான செருப்பை அணிவது நல்லது” என்று அறிவுறுத்துகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்… சாப்பாட்டுடன் ஜூஸ் குடிப்பது நல்லதா?
’ஆர்.என். ரவியை மாத்திடாதீங்க’ : அடுக்கடுக்கான காரணங்களை அடுக்கிய ஸ்டாலின்
பெரியார் அவதூறு: சீமானுக்கு சம்மன்!
டிஜிட்டல் திண்ணை: இடைத் தேர்தல் வியூகத்தில் ஸ்டாலின் செய்த திடீர் மாற்றம்!
பிக்பாஸ் தமிழ் 8 நாளை இறுதி சுற்று : 50 லட்சத்தை வெல்ல போவது யார்?