கிச்சன் கீர்த்தனா: டிரை ஃப்ரூட்ஸ் கிரிஸ்ப்பி!
குழந்தைகள் மதிய நேரத்தில் மிச்சம் வைக்காமல் சாப்பிட டேஸ்ட்டியாகவும் அதே நேரம் ஹெல்த்தியாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர், இந்த டிரை ஃப்ரூட்ஸ் கிரிஸ்ப்பி செய்து கொடுக்கலாம்.
என்ன தேவை?
கோதுமை மாவு – 200 கிராம்
முந்திரி, பாதாம், பிஸ்தா
பேரீச்சை – தலா 5
உலர் திராட்சை- 10
நெய்- தேவையான அளவு
எப்படிச் செய்வது?
பாதாமை வெந்நீரில் ஊற வைத்து தோல் உரிக்கவும். பேரீச்சை, முந்திரி, பிஸ்தா மற்றும் உலர் திராட்சையை ஐந்து நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு எல்லா வற்றையும் ஒன்று சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கோதுமை மாவுடன் கலந்து (மிதமான வெந்நீர் சேர்த்து) நன்கு பிசைந்து சப்பாத்தியாக இட்டு, நெய்விட்டு சுட்டு எடுக்கவும். பிறகு நீளவாக்கில் மெலிதாக கட் செய்து, வட்ட வட்டமாகச் சுற்றி, லஞ்ச் பாக்ஸில் வைக்கவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: வெஜ் ரோல் சப்பாத்தி!
கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – நான்ஸ்டிக் பாத்திரங்கள்… எச்சரிக்கும் ஐசிஎம்ஆர்!
டிஜிட்டல் திண்ணை: தமிழிசைக்கு எதிராக அண்ணாமலையின் டெல்லி மூவ்!
சிறுத்தைய விட இதான் பயங்கரம் : அப்டேட் குமாரு