couples married before leo movie

லியோ வெளியான திரையரங்கில் காதலியை கரம் பிடித்த ரசிகர்!

டிரெண்டிங்

புதுக்கோட்டையில் லியோ திரைப்படம் வெளியான திரையரங்கில் காதல் ஜோடி மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கும் சர்ச்சைகளுக்கும் மத்தியில் இன்று (அக்டோபர் 19) வெளியானது.

தமிழகத்தில் 9 மணி காட்சிக்கு அரசு அனுமதி கொடுத்திருந்த நிலையில் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் ஆந்திராவில் காலை 4 மணி 5 மணிக்கே சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. சிறப்பு காட்சியை காண்பதற்காக தமிழ்நாட்டில் இருந்து ரசிகர்கள் அண்டை மாநிலங்களுக்கு சென்று படத்தை பார்த்துக் கொண்டாடினர்.

தொடர்ந்து 9 மணிக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் லியோ வெளியானது. பட்டாசு வெடித்து ஆட்டம் பாட்டத்துடன் ரசிகர்கள் கொண்டாடினர்.

இந்த கொண்டாட்டங்களுக்கு மத்தியில் விஜய் ரசிகர் வெங்கடேஷ் என்பவர் தனது காதலி சங்கீதாவிற்கு லியோ படம் வெளியான திரைக்கு முன் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

அப்போது விஜய் ரசிகர்கள் மற்றும் அவர்களுடைய நண்பர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். வெங்கடேஷ் மற்றும் சங்கீதா ஆகிய இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இவர்களின் நீண்ட நாள் ஆசை விஜய் முன்னிலையில் திருமணம் நடக்க வேண்டும் என்பது தான். அதனை நிறைவேற்றும் வகையில் இன்று லியோ படம் வெளியான திரைக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் நாளை முறைப்படி திருமணம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

லியோ படம் குறித்த விமர்சனங்கள், செய்திகளுக்கு மத்தியில் விஜய் ரசிகரின் திருமணம் குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

கர்நாடக துணை முதல்வர் சொத்துகுவிப்பு வழக்கு: உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

அரசு இயந்திரமா, திமுகவின் செய்தி தொடர்பு நிறுவனமா?: அண்ணாமலை கேள்வி!

பிஎஃப் கணக்கு வைத்திருக்கிறீர்களா?: உங்கள் கவனத்திற்கு!

செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் இல்லை… அவரது தம்பியையும் கைது செய்யுங்கள்: நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *