தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ஷங்கர் மகள் அதிதி, நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகி உள்ள விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை தியேட்டரில் விருமன் படத்தை பார்த்து முடித்து விட்டு வெளியில் வந்த நடிகர்கூல் சுரேஷ் செய்தியாளர்களிடம் பேசியபோது, “இயக்குநர் ஷங்கரை, மாமா ஷங்கர் உங்கள் மகளை நான் காதலிக்கிறேன் எனக் கூறியதுடன், அதிதியை பார்த்து சில்லறையை சிதற விட்டேன் என்றும், அதிதி ஷங்கர் தான் என்னுடைய காதலி” என்றும் பேசிய வீடியோ சோஷியல் மீடியாவில் காமெடியாக டிரெண்டானது.
இதனை பார்த்த திரையுலகினர் அநாகரிகமான செயல் என்று விமர்சனம் செய்தனர். பலரும் கூல் சுரேஷிடம் தொலைபேசியில், ‘நீ பேசியது வரம்புமீறியது, சினிமாவில் உனது எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்பதுடன் எந்த இயக்குநரும் உனக்கு வாய்ப்பு தரமாட்டார்கள் கதாநாயகிகள் மட்டுமல்ல நடிகர்களே உனக்கு அவர்கள் நடிக்கும் படங்களில் வாய்ப்பு தருவதை தவிர்க்குமாறு கூறிவிடுவார்கள். பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு விடு’ என அறிவுறுத்தியுள்ளார்கள்.
இந்த நிலையில் கூல் சுரேஷ் தனது பள்ளி தோழி தேன்மொழி ஞாபகம் அதிதி தேனாக நடித்ததை பார்த்து வந்து விட்டது என்றும் அப்படி பேசியது தவறு தான் என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறி உள்ளார்.
மன்னிப்பு மட்டும் கேட்காமல், நடிகை அதிதி ஷங்கர் எனக்கு தங்கச்சி மாதிரி என்றும் கூறியிருப்பதை நகைச்சுவையுடன் அணுகும் சமூக வலைதளவாசிகள் கூலுக்கு கொலை நடுங்கிடுச்சோ பம்மி பதுங்கிட்டாரே என விமர்சித்து வருகின்றனர்.
நடிகர் சங்க கட்டுமான செலவு: ரூ. 25 லட்சம் வழங்கிய விருமன் படக்குழு!