சிம்புவின் பத்துதல படத்திற்கு நடிகர் கூல் சுரேஷ் ஹெலிகாப்டர் பொம்மையுடன் வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் நடித்த படம் பத்து தல. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருக்க நடிகை சாயிஷா ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார்.
ஏ.ஆர். ரகுமான் இசையில் சாயிஷா நடனம் ஆடிய ராவடி பாடல் உட்பட அனைத்து பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிம்பு நடிப்பில் அடுத்த படத்திற்காக அவரது ரசிகர்கள் காத்திருந்தனர்.
இந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தான் இன்று (மார்ச் 30) காலை 8 மணிக்கு சிம்புவின் பத்து தல படம் வெளியானது.
படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர்கள் பலரும் திரையரங்கு வாசலில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக சிம்புவின் படம் வெளியாகிறது என்றாலே அங்கு கூல் சுரேஷ் கண்டிப்பாக வந்திருப்பார்.
இந்த படத்திற்கு கூல் சுரேஷ் ஒரு வித்தியாசமான எண்ட்ரி கொடுத்தார். ரோகிணி திரையரங்கிற்குப் படம் பார்க்க வந்த கூல் சுரேஷ் கையில் ஒரு ஹெலிகாப்டர் பொம்மையுடன் வந்திருந்தார்.
திரையரங்கில் இருந்த பலர் அவரை சூழ்ந்திருந்த போதும் அந்த ஹெலிகாப்டரை தலைக்கு மேல் தூக்கிப்பிடித்துக் கொண்டே படம் பார்க்க உள்ளே சென்றார்.
கூல் சுரேஷ் ஹெலிகாப்டருடன் வந்த வீடியோவை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து “இது தான் நீங்கள் சொன்ன ஹெலிகாப்டர் எண்ட்ரியா?” என்று கிண்டலாக கேள்வி கேட்டு வருகின்றனர்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மோனிஷா
பல்கலைக்கழகங்களில் சாதி ஒடுக்குமுறை: வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!