Cool and Unique Hairstyles for Women
கூந்தலை நடுவகிடு எடுத்து, நெற்றிச்சுட்டி அணிந்து, குஞ்சம் வைத்து அலங்கரித்த பின்னல் முழுக்க பூச்சூடி… இதுதான் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை விசேஷங்களுக்கான ஹேர்ஸ்டைலாக இருந்தது.
ஆனால், இப்போது ஹை பன் (High bun), ஃபிஷ்டெயில் (Fishtail), ஃபிரெஞ்சு பிரைடு (French braid), மெஸ்ஸி பன் (Messy bun) என பெண்களின் ஹேர்ஸ்டைல்கள் நவீனமாகி வருகின்றன.
அந்த வகையில் திருமணத்தின்போது சங்கீத், முகூர்த்தம், ரிசப்ஷன் என ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் வெரைட்டியான, அதே நேரம் முக அமைப்புக்கும் ஏற்ப ஹேர்ஸ்டைல் டிப்ஸ் இதோ…
உங்களுடையது மிக வறண்ட கூந்தல் எனில் திருமணத்துக்கு முன் ஒருமுறை ஸ்மூத்தனிங் செய்து கொள்ளலாம். வறண்ட கூந்தல் உடையவர்கள் ஃப்ரீ ஹேர், மெஸ்ஸி பன் போன்ற ஹேர்ஸ்டைல்களைத் தவிர்க்கலாம்.
சில்க்கி ஹேர் எனில் ஹேர்ஸ்டைல் செய்வதற்கு முன் அயனிங் செய்வதைத் தவிர்க்க வேண்டும். சில்க்கி ஹேருக்கு எனக் கடைகளில் கிடைக்கும் க்ளாஸ் பவுடர் (Glass powder) வாங்கி, ஸ்கால்பில் படாமல் ஒவ்வொரு லேயரிலும் அப்ளை செய்து, அதன் பின் ஹேர்ஸ்டைலிங் செய்து கொள்ளலாம் அல்லது புளோ டிரை செய்து கொள்ளலாம்.
ஹேவி ஹேர் ஸ்டைல், பிரெஞ்சு பிரைடு போன்றவை பொருத்தமான தேர்வாக இருக்கும். சில்கி ஹேர் உடையவர்கள் இறுக்கமான பின்னல்களைத் தவிர்க்க வேண்டும்.
உங்களுடையது நார்மல் ஹேர் எனில் நீங்கள் எல்லாவிதமான ஹேர் ஸ்டைலையும் முயற்சி செய்யலாம்.
நீங்கள் முன்பே ஹேர் கலரிங் செய்திருந்தால் உங்கள் கலரிங்க்கு தகுந்த ஹேர்ஸ்டைல்களைத் தேர்வு செய்வது அவசியம்.
தரமான ஹேர் ஸ்பிரே, ஜெல் வகைகளைப் பயன்படுத்தியிருந்தாலும் ஹேர்ஸ்டைலிங் செய்த பின், தூங்கச் செல்வதற்கு முன் ஹேர் வாஷ் செய்வது அவசியம்.
ஹேர்ஸ்டைலிங் செய்த உங்கள் கூந்தலைக் கைகளைப் பயன்படுத்தி கலைத்த பின்பே, சீப்பைப் பயன்படுத்த வேண்டும்.
ஹேர் ஜெல், ஸ்பிரே போன்றவற்றைப் பயன்படுத்தும்போது அவை ஸ்கால்ப்பில்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
ஆடைக்கு மேட்ச்சான ஹேர் கலரிங் விரும்பும் பெண்கள், எக்ஸ்டன்ஷன் பயன்படுத்திக் கொள்ளலாம். நிரந்தர கலரிங் செய்திருப்பவர்கள் அதற்குரிய ஷாம்புகளைப் பயன்படுத்துவது அவசியம்.
உங்களைத் தனித்துவமாகக் காட்டும் ஹேர்ஸ்டைல்களைத் தேர்வுசெய்தால் நீட் லுக்கில் அசரடிக்கலாம்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: தமிழ்நாட்டில் கவனம் குவிக்கும் மோடி… பாஜக கரை வேட்டி கட்டும் பன்னீர்?
அவைகுறிப்பிலிருந்து பெரியார் பெயர் நீக்கம்: ஸ்டாலின் கண்டனம்!
பிக்பாஸ் நாமினேஷன்: இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார்?
Cool and Unique Hairstyles for Women