கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காகவே ஹேர் கட் செய்து கொள்ளப்படும் நிலையில் ஹேர் கட் செய்வதற்கு முன் இந்த விஷயங்களைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
“ஹேர் கட் செய்வதற்கு முன் தலைமுடி அமைப்பை சரி பார்க்க வேண்டும். நேரான (ஸ்ட்ரெயிட்டான) அமைப்பில் இருக்கிறதா, அலை அலையான (வேவியான) அமைப்பில் இருக்கிறதா அல்லது சுருட்டையான (கர்லியான) அமைப்பில் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ளவும்.
பின்னர், தலைமுடியின் அடர்த்தியையும் கவனிக்க வேண்டும். ஏனெனில், சிலருக்கு கழுத்துப் பகுதியிலோ, தலை பகுதியிலோ முடி அதிகமாக இருக்கும்.
சிலருக்கு தலையின் அத்தனை பகுதியிலுமே முடியின் அடர்த்தி குறைவாக இருக்கும். அவர்களின் தலைமுடிக்கு எந்த மாதிரியான ஹேர் கட் சரியாக இருக்கும் என்பதை கவனிக்க வேண்டும்.
முடியின் அடர்த்தியுடன், தலைமுடியின் வளர்ச்சி விகிதம் குறித்தும் தெரிந்து கொள்வது அவசியம். உங்கள் தொழில் என்ன, உங்களுக்கு எந்தவிதமான ஹேர் ஸ்டைல் சரியானதாக இருக்கும் என்பதை சிகை அலங்கார நிபுணர்களின் தரப்பிலிருந்து கேட்டு தெரிந்துகொண்டு ஹேர் கட் செய்வது நல்லது.
ஹேர் ஸ்டைலை தேர்ந்தெடுப்பதற்கு முன் உங்களின் முக அமைப்பையும் பார்க்க வேண்டும்.
வட்ட முக அமைப்போ, சதுர முக அமைப்போ, ஹேர் கட் செய்து கொள்பவரின் முகத்தை கூடுமான வரையில் சிகை அலங்கார நிபுணர்கள் நீள்வட்ட (Oval) முக அமைப்புக்குக் கொண்டு வரவே முயற்சி செய்வார்கள். காரணம், நெற்றியிலிருந்து சரியும் முடி, கழுத்து வரை முறையான அளவீட்டுடன் சரியும்போது நீள்வட்ட முகவமைப்பில் இருக்கும்போதுதான் அதன் அழகு மேலோங்கும். மேலும், முக்கோணம், ஆப்லாங் மற்றும் ஹார்டின் முக அமைப்பில் இருப்பவர்களுக்கும் இதே ஃபார்முலாதான். இயற்கையாகவே ஓவல் வடிவத்தில் முக அமைப்பு இருப்பவர்களுக்கு எந்த ஹேர் ஸ்டைலும் பொருத்தும்” என்று சிகை அலங்கார நிபுணர்கள் விவரித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள் : மோடி, ஸ்டாலின் கொடி ஏற்றுதல் முதல் தங்கலான் ரிலீஸ் வரை!
ஹெல்த் டிப்ஸ்: புரதச்சத்துக்காக ‘புரோட்டீன் பார்’சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
பாடப்புத்தகங்கள் விலை உயர்வு: அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!