தங்களுக்கான பர்ஃயூமை எப்படித் தேர்வு செய்வது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கும். பர்ஃயூமின் மனம் ஒவ்வொருவருடைய உடல் தன்மைக்கேற்ப மாறுபடும். ஒவ்வொருவருக்கும், அவர்களின் ஹார்மோன், ஃபெரோமோன் பொறுத்து பர்ஃயூமின் மனம் ஓங்கியோ அல்லது மங்கியோ இருக்கும்.
அதனால் அவரவர் மணிக்கட்டில் வாங்க நினைக்கும் பர்ஃயூமை ஸ்ப்ரே செய்து, கொஞ்ச நேரத்திற்கு பின் முகர்ந்து பாருங்கள். பிறகு முடிவெடுங்கள்.
நீங்கள் என்ன மாதிரியான உடை அணிகிறீர்கள், எந்த இடத்திற்கு செல்கிறீர்கள், எங்கு அதிகமாக இருக்கிறீர்கள் போன்றவற்றை மனதில் கொண்டு உங்களுக்கான பர்ஃயூமை தேர்ந்தெடுங்கள்.
நீங்கள் பயன்படுத்தும் வாசனை திரவியம் நீங்கள் வருவதற்கு முன் சில அடி தூரம் வரை மனம் வீசி நீங்கள் வரப்போகிறீர்கள் என்பதை தெரிவித்துவிடும்.
அப்படி பயன்படுத்தும் பர்ஃயூம் மற்றவர்கள் ரசிக்கும்படியாக இருக்க வேண்டும். முகம் சுளிக்கும்படியாக இருக்கக் கூடாது.
முதலில் எந்த கம்பெனி பர்ஃயூம் வாங்கப்போகிறீர்கள் என்று முடிவு செய்யுங்கள். பிறகு, அந்த கம்பெனியில் இருக்கும் மற்ற ரகங்களை ஆராய்ந்து உங்களுக்கான ஒரு பர்ஃயூமை தேர்வு செய்யுங்கள்.
பார்க் அவென்யூ, ஃபாக், ஃபாரெஸ்ட் ஸ்பைஸ், யார்டலே, ப்ளாக் ஜாக், ஜியோர்ஜியோ அர்மானி, பெர்பெர்ரி பார் வுமன் , குச்சி, ரெவ்லான் சார்லி ரெட் பர்ஃயூம்,கால்வின் கிளைன் போன்றவை இந்தியாவில் பெண்களுக்கான (women) முதன்மை பர்ஃயூம்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்களால் கடைக்குச் சென்று தேர்வு செய்ய முடியவில்லை என்றால் ஆன்லைனிலும் வாங்கிக் கொள்ளலாம். தள்ளுபடி உள்ள பர்ஃயூமை பார்த்து மயங்கி விடாதீர்கள்.
ஆன்லைனில் வாங்குகிறீர்கள் என்றால், நீங்கள் தேர்ந்தெடுப்பதற்கு முன் அவர்கள் சில கேள்வி பதில்கள் வைத்திருப்பார்கள். அதைச் சரியாக செய்து, ஒவ்வொன்றுக்கும் தகுந்த விளக்கம் இருக்கும், அவற்றையும் சரியாக படிக்க வேண்டும். பிறகு உங்களுக்கான ஒன்றைத் தேர்வு செய்யுங்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தோனியின் ஓய்வு குறித்து சிஎஸ்கே நிர்வாகம் சொன்ன முக்கிய தகவல்!
தக் லைஃப் : கமல், சிம்பு உடன் இணையும் அசோக் செல்வன்… படப்பிடிப்பு எங்கு தெரியுமா?
கோவாக்சின் தடுப்பூசியால் பக்கவிளைவா? – ஐசிஎம்ஆர் விளக்கம்!
ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை!