மழைத் தூறல் போட்டுக்கிட்டிருந்த நேரத்துல சூடா பஜ்ஜி சாப்பிடலாம்னு பக்கத்து அண்ணாச்சி கடைக்குப் போனோம். அப்பதான் ஒரு மய்யஸ்தர் அதாங்க கமல் ரசிகர், இந்தியன் 2 பட அப்டேட் பத்தி செல்போன்ல பாத்துக்கிட்டிருந்தார்.
நான் சும்மா இருக்காம, ‘ஏன்யா… உங்க ஆளோ காங்கிரஸ் கூட இருக்காரு. டைரக்டர் ஷங்கரோ அந்தப் பக்கம் இருக்குறவரு… இப்ப படத்துக்கு பேரை இந்தியன்னு வைப்பாங்களா, இல்லை பாரதீயன்னு மாத்திடுவாங்களா? இதனால ஷங்கருக்கும் கமலுக்கும் ஃபைட் சீன் ஆகிடப் போகுது’னு கேட்டேன்.
டப்புனு டீ தலைக்கேறி செறுமினவரு, ‘என்னண்ணே இப்படி சொல்லிட்டீங்க?’னு அதே யோசனையா போனாரு…
நீங்க அப்டேட்ட பாருங்க…
ஷேக்பரித்
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – செய்தி
நேரு எங்கடா ?
நெல்லை அண்ணாச்சி
அயோத்தி் சாமியார் தலைக்கு 100 கோடி..சீமான்
#தம்பிக்கு ஒண்ணுன்னா… அண்ணனால தாங்க முடியுமா..!??
ஜோ..
“பாகுபாடு இருக்கும் வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும்” – மோகன் பகவத், ஆர்.எஸ்.எஸ் தலைவர்.
~ இவரா இப்பிடி சொன்னார்னு யாரும் ஷாக் ஆகாதீங்க ப்ரெண்ட்ஸ். எல்லாமே வெறும் எலெக்சன்க்காகதான். நாளைக்கே ஆட்சிக்கு வந்துட்டா EWS க்கு 20 % குடுத்து அவா கோவத்தைலாம் சரி பண்ணிருவானுங்க.
black cat 2
கைல ஏதோ எழுதிருக்க என்னது?
I love Bharat ❤
புது லவ்வர் புடிச்சிட்டில்ல..good bye
black cat 2
இருக்க ஒரு கதையக் கூட உருப்படியா எடுக்காத மத்த டைரக்டர்ஸ் எங்க..
எடுக்குற ஒரு படத்துல ஒம்போது படத்தோட கதையக் கொண்டாந்து காமிக்கிற அட்லீ எங்க..❤️
-Jawan
ஊர்க்காவலன்™
என்ன பெரிய காதல் வலி..
தொலைஞ்சி போன இயர் போனுக்கு EMI கட்டிருக்கியா.
கடைநிலை ஊழியன்
ஷாருக் – மெர்சல் மாதிரி ஒரு interval block எடுக்கணும் சார்..
மெர்சல் interval block ‘கயே ஏன் எடுக்க கூடாது என்று உணர்கிறார் அட்லீ..
கடைநிலை ஊழியன்
அடுத்த மாசம் சம்பளம் வரதுக்கு இன்னும் எத்தன நாள் இருக்கு னு கொஞ்சம் சொல்லுங்க ணே..
ஒழுங்கா போயிரு.. அதான் உனக்கு நல்லது..
P.M.Sridhar
இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றப்போவதாக வெளியாகும் தகவல்கள் வதந்தி… மத்திய அமைச்சர் விளக்கம்.,
அது வதந்தியா இருந்தாலும் பெயர் மாற்றத்திற்க்கு அதிமுக கொடுத்த ஆதரவை ஒரு போதும் திரும்ப வாங்க போவது இல்லை.
ஷேக்பரித்
பாகுபாடு இருக்கும் வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும் – மோகன் பகவத்.,
இவனுகள நம்பி போல்ட்டா ஏதும் பேச முடியலியே – சங்கீஸ்
கோழியின் கிறுக்கல்!!
ஆகப்பெரிய முட்டாள்தனம் என்பது,
RAIN COAT போட்டுட்டு போனா மழையில் நனைய மாட்டோம் என நம்புவது!!
லாக் ஆப்
டிஜிட்டல் திண்ணை: மோடி கோபம்… கணக்குத் தீர்க்கும் கவர்னர்? காத்திருக்கும் உதயநிதி
அமைச்சர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் வளர்மதி: தொடரும் சூமோட்டோ!