பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் நடிகர் ரஞ்சித்தின் நண்பராக வந்த ஒருவர், நடிகர் விஜய் சேதுபதியிடத்தில் சாப்ட்டீங்களானு கேட்க, இது எங்க ஊரு வழக்கம் அப்படினு சொன்னார்.
இதையடுத்து, நடிகர் விஜய் சேதுபதி உங்க ஊர்ல மட்டுமல்ல, எல்லா ஊர்லையும் அப்படிதான் கேட்பாங்க. எங்க ஊர்ல வெளியே போன்னா சொல்வாங்க என்று முகத்தில் அடித்தது போல பேசினார். விஜய் சேதுபதியின் இந்த பேச்சை கண்டித்து கோவை மக்களின் பழக்கவழக்கத்தை அவமதித்து விட்டதாக சமூகவலைத் தளங்களில் சிலர் பரப்பி வருகின்றனர். கோவை விஸ்வா என்பவர் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவை பார்க்கலாம்.
பிக்பாசில் நிகழ்ந்த ஒரு சாதாரண நிகழ்வை அசாதாரணமாக மாற்றியது விஜய் சேதுபதி என்றால் அதை மேலும் அருவெருக்கதக்கதாக மாற்றியது நமது முகநூல் நண்பர்கள். “சாப்ட்டீங்களா?” என்று கேட்பது கோயமுத்தூரை குறித்து பீத்துவதற்காக அல்ல . வீட்டிற்கு யார் வந்தாலும் அவர்களுடனான உரையாடல் ஆரம்பித்தாலே “நல்லா இருக்கீங்களா . சாப்ட்டீங்களா.. என்றுதான் கேட்டு ஆரம்பிக்கவேண்டும் என்பதுதான் எங்களுடைய பெற்றோர் எங்களுக்கு கற்றுகொடுத்தது .
ஒருவேளை அவர்கள் “இல்லை..” என்று சொன்னால் “அஞ்சு நிமிஷம் இருங்க..” ..” என்று ஓடிப்போய் உலை வைத்துவிட்டு வந்துதான் பேச அமருவோம். பேசி முடிப்பதற்குள் சாப்பாடு தயாராக எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக பெண்கள் இயங்குவார்கள் . அப்படி எதுவுமே இயலாத நேரம், அவசரம் என்றால் அதற்காக உண்டாக்குவதுதான் “அரிசிம்பருப்பு சாதம்” “அரிசிம்பருப்பு” சாதத்தை குறித்து எவ்வளவு எள்ளி நகையாட முடியுமோ அவ்வளவு பேசியாகி விட்டது . இப்போது இந்த “சாப்ட்டீங்களா..” வை எடுத்து கொண்டிருக்கிறார்கள்.
காலம் காலமாக பழக்கி வந்த எப்பேர்பட்ட நற்பண்பு இந்த ஒரு பரிகாசித்தலில் கேலிப்பொருள் ஆகிவிடாதா ? இனிமேல் குழந்தைகள் இதை பேச தயங்க மாட்டார்களா? “எங்க ஊர்ல கேப்போம்..”என்றுதான் அவர் சொன்னாரே தவிர எங்க ஊரில் மட்டும்தான் கேப்போம்..வேற எந்த ஊரிலாவது கேட்பார்களா .” என்று பேசி இருந்தால் அவரை தாராளமாக பரிகாசிக்கலாம் . அந்த மனிதர் என்றும் கூனிக்குறுகும் அளவுக்கு சமூக ஊடகமெங்கும் உங்கள் பரிகாசம் தெளிக்கப்பட்டிருக்கிறது.
இதுவே “இல்ல சார் .. நடிக்கரத விட்டுட்டு பிக்பாஸ்க்கு வந்துட்டீங்களே.. சான்ஸ் இல்லாம சாப்பிடக்கூட வழி இல்லாம வந்துட்டீங்களோ… என்னமோ… அதான் சாப்ட்டீங்கலான்னு கேட்டேன்..” என்று திருப்பி பேசி இருந்தால் என்னவாகி இருக்கும். யாருடைய ஊரையும் பரிகாசிக்கவோ, கேலி பேசவோ யாருக்கும் உரிமை இல்லையெனில் தனிப்பட்ட ஒரு நபரை பேசுவதே தவறெனில் ஒரு ஊரையும், அந்த ஊருக்கென்றே இருக்கும் மரியாதையும், விருந்தோம்பல் மாண்பு எனும் பெரிய நாகரீகத்தின் மேல் உங்களுக்கெல்லாம் ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி .
ஒரு அற்புத நடிகர், சீனியர் ரஞ்சித்துக்கு கொடுத்த மதிப்பு அவ்வளவுதானா ? இருபது வருடங்களாக எண்ணற்ற கதாபாத்திரங்களை அனாயாசமாக ஊதித்தள்ளிய நல்ல கலைஞர் அவர் , ஒரு சீனியரை வரவேற்க வேண்டிய ஒரு உடல்மொழியும், மரியாதையும் கூட விஜய் சேதுபதியிடம் இல்லை . அது கூட பரவாயில்லை . அவரின் நண்பராக வந்தவர் என்ன குற்றம் செய்தார் பாவம் .. உங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பங்கேற்பாளரை அசட்டை செய்ததுமில்லாமல், உங்களது நிகழ்ச்சியை காண வந்த விருந்தினரை கூட மரியாதையாக நடத்த தெரியாத உங்களை போய் அவர் “சாப்ட்டீங்களா…” என்று மரியாதை செய்து கேட்டாரே பாவம் , அதுதான் அந்த மனிதர் செய்த பெரிய குற்றம் . இப்படி, அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் இரா. முருகவேல் இன்னும் ஆவேசமாக பேஸ்புக்கில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
கொங்கு வை பற்றி பேசினால் முழுசா பேசுங்கப்பா. ரோட்ல போயிட்டு இருக்கறவனை எங்கூருக்கு வந்துட்டு சாப்புடாம போனா எப்புடின்னு தர த்ரன்னு இழுத்துட்டு வந்து கோழி அடிச்சு விருந்து வெக்கறவனும் கொங்கான் தான்.’
மழை காலத்தில் மின் தடைகள் : அமைச்சர் செந்தில் பாலாஜி போட்ட உத்தரவு!
டிரைவருக்கு சம்பளம் கொடுக்க கூட வழியில்லாமல் அமிதாப் தவித்தார் – ரஜினிகாந்த் சொன்ன தகவல்கள்!