கோவை தடாகம் பகுதி அருகே வீட்டு சுற்றுச்சுவரில் நின்று கொண்டிருந்த கோழியை, சிறுத்தை கவ்விச்செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவையில் சிறுத்தை நடமாட்டம்!
கோடைக்காலத்தில் கோவை மாவட்டத்தைச் சுற்றியுள்ள வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் வரும் சம்பவம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் கடந்த மே 23ஆம் தேதி கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த காட்டுயானை ஒன்று அங்கிருந்த காவலாளியை தாக்கியதில் அவர் உயிரிழந்தார். தொடர்ந்து, யானைகள் மற்றும் சிறுத்தைகள் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழையும் வீடியோக்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியாகிறது.
வனவிலங்குகள் ஊர் பகுதிக்குள் நுழைவதால், அங்கு வசிக்கும் மக்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர்.
கோழியை கவ்விச் சென்ற சிறுத்தை
இந்நிலையில், கோவை மாவட்டம் தடாகம் அருகே சோமையனூர் பகுதியில் வீட்டின் சுவரின்மீது கோழி ஒன்று அமர்ந்துகொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த சிறுத்தை, அந்த கோழியை கவ்விச்செல்லும் காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
இந்த வீடியோவில், அதிகாலை 5.50 மணிக்கு வீட்டின் சுற்றுச்சுவர் மீதிருந்த கோழியை, நொடியும் தாமதிக்காது சிறுத்தை ஒரே குதியில் கவ்விச்செல்வது பதிவாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அதோடு வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் நுழைவதை தடுக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
SK vs DQ : “லக்கி பாஸ்கர்” ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!
கோட்சே வழி வந்தவர்களுக்கு காந்தியை பற்றி தெரியாது… மோடிக்கு ராகுல் பதிலடி!
Comments are closed.