விநாயகருக்குப் படைக்கும் கொழுக்கட்டை வித்தியாசமாகவும் இருக்க வேண்டும்… அதே நேரம், சட்டென்றும் சமைத்து முடிக்கும்படி இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கான பெஸ்ட் சாய்ஸ் இந்த தேங்காய்ப் பூரண கொழுக்கட்டை. விநாயகருக்கு நீங்கள் செய்யும் உணவுகளுடன் இந்தக் கொழுக்கட்டையும் படைத்து, சதுர்த்தி தினத்தை ஸ்பெஷலாக்குங்கள்!
என்ன தேவை?
பச்சரிசி மாவு – ஒரு கப்
தண்ணீர் – 2 கப்
நெய் (மேல் மாவுக்கு) – ஒரு டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – ஒரு கப்
பொடித்த வெல்லம் – முக்கால் கப்
ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்
நெய் (பூரணத்துக்கு) – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை
எப்படிச் செய்வது?
வாணலியில் தண்ணீர், உப்பு, ஒரு டீஸ்பூன் நெய் விட்டு அடுப்பில் வைக்கவும். கொதி வந்ததும் தீயைக் குறைத்து வைத்துவிட்டு, பச்சரிசி மாவைத் தூவி, கட்டி தட்டாமல் கிளறவும். வாணலியை மூடி வைக்கவும். இரண்டு நிமிடம் கழித்து, வாணலியைத் திறந்து நன்றாகக் கிளறி, மாவு கெட்டி யானவுடன் அடுப்பை அணைத்து, வாணலியை மூடி வைக்கவும்.
இன்னொரு வாணலியில் நெய்யைச் சூடாக்கி, தேங்காய்த் துருவல், பொடித்த வெல்லம் சேர்த்துக் கிளறவும். எல்லாம் சேர்ந்து வரும்போது ஏலக்காய்த்தூள் போட்டுக் கலந்து இறக்கி வைக்கவும். இதுதான் தேங்காய்ப் பூரணம். வேகவைத்த மாவை கட்டி இல்லாமல் பிசைந்து, அதிலிருந்து ஒரு உருண்டை எடுத்து, எண்ணெயைத் தொட்டுக்கொண்டு, கை விரல்களால் அழுத்தி சிறு கிண்ணம் போல் செய்து, நடுவில் தேங்காய்ப் பூரணம் கொஞ்சம் வைத்து மூடி, வேண்டிய வடிவத்தில் கொழுக்கட்டையாக செய்யவும். இப்படி எல்லாவற்றையும் செய்து, இட்லித் தட்டில் வைத்து, 10 நிமிடங்கள் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : எள்ளுப் பூரணக் கொழுக்கட்டை!
கிச்சன் கீர்த்தனா: ரவை ஸ்வீட் கொழுக்கட்டை!
தியேட்டருல ஜாலி… ஆபிஸே காலி : அப்டேட் குமாரு
வரி கட்டும் அளவை விரிவுபடுத்துவதில் மாநில அரசின் பங்களிப்பு அவசியம் : நிர்மலா சீதாராமன்