சத்தீஷ்கர் மாநிலத்தில் சிறுவன் கடித்து நாகப்பாம்பு ஒன்று உயிரிழந்த விநோத நிகழ்வு நடந்திருக்கிறது.
ராய்ப்பூருக்கு வடகிழக்கே 350 கிமீ தொலைவில் உள்ள ஜாஷ்பூர் மாவட்டத்தில் பந்தர்பாத் என்ற கிராமம் உள்ளது.
இந்த கிராமத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுவன் தீபக்கின் கையில் நாகப்பாம்பு சுற்றியிருக்கிறது.
இதையடுத்து அந்த நாகப்பாம்பை சிறுவன் தீபக் விடுவிக்க முயற்சித்தபோது, அது அந்த சிறுவனை 2 முறை கடித்து இருக்கிறது.
இதனால் வலியில் துடித்த சிறுவன் பதிலுக்கு நாகப்பாம்பை அதேபோன்று இரண்டுமுறை கடித்திருக்கிறான். இதில் நாகப்பாம்பு உயிரிழந்தது.
பாம்பு கடித்த சிறுவன் தீபக்கை அவரது குடும்பத்தினர் அவரை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
அங்கு பாம்பு கடிக்கான மருந்து கொடுக்கப்பட்டு ஒரு நாள் முழுவதும் கண்காணிப்பில் வைத்து வீட்டுக்கு அனுப்பியதாக அந்த தொகுதி மருத்துவ அதிகாரி டாக்டர் ஜெம்ஸ் மின்ஜ் கூறினார்.
ஜாஷ்பூர் ஒரு பழங்குடி மாவட்டமாகும், இது நாக்லோக் (பாம்புகளின் இருப்பிடம்) என்றும் அழைக்கப்படுகிறது.
ஏனெனில் இது 200 வகையான பாம்புகளைக் கொண்டுள்ளது. ஆனால் இங்கு சிறுவன் கடித்து பாம்பு உயிரிழப்பு இதுவே முதல்முறை என்று சுற்றுவட்டார மக்கள் தெரிவித்தனர்.
கலை.ரா
டி20 உலகக்கோப்பை: மழையால் தடைப்பட்ட இந்தியா-வங்கதேசம் போட்டி!
அரசியல் கோமாளி அண்ணாமலை: அமைச்சர் மனோ தங்கராஜ்