நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கொண்டாட்ட ஏற்பாடுகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில், ஆகஸ்ட் 13 முதல் 15 வரையில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும். ஆகஸ்ட் 2 முதல் 15 வரையில் மக்கள் அனைவரும் தங்களது சமூக வலைதள பக்கங்களின் டி.பி-யில் தேசியக்கொடியை வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
டிபியை மாற்றிய முதல்வர்

பிரதமரின் வேண்டுகோளை ஏற்று மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள் தங்களது ப்ரோஃபைலை தேசியக்கொடியாக மாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு தனது ட்விட்டர் புகைப்படத்தை மாற்றியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் கலைஞர், செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து விட்டு படியில் இறங்கி வருவது போன்ற புகைப்படத்தை டிபியாக மாற்றி பகிர்ந்துள்ளார்.
அதில், “ஆகஸ்ட் 15-ஆம் நாளன்று மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை 1974ஆம் ஆண்டு பெற்றுத் தந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக பிரதமர் மோடி தேசியக் கொடியை டிபியாக வைத்தார். அதுபோன்று ராகுல் காந்தி முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தேசியக் கொடியை ஏந்தியிருக்கும் படத்தை ட்விட்டர் சுயவிவரப் புகைப்படமாக வைத்தார். தற்போது முதல்வர் ஸ்டாலினும் டிபியை மாற்றியுள்ளார்.
செல்வம்
என்னை ஏன் மாற்றச் சொன்னீர்கள்?’ -ஓபிஎஸ்சுக்கு நீதிபதி கண்டனம்!