அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் உள்பட ட்விட்டரின் 2.5 லட்சம் கணக்குகளை முடக்க அமெரிக்க அரசு வலியுறுத்தியதாக எலான் மஸ்க் கூறியுள்ளார்.
உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தியதில் இருந்தே பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளாகிவருகிறார்.
ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரியாக எலான் மஸ்க் பொறுப்பேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் மாற்றங்கள் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
விரைவில் பல வருடங்களாக ட்வீட் அல்லது ட்விட்டரில் உள்நுழைவு இல்லாத கணக்குகள் நீக்கப்படும் என்று கடந்த டிசம்பர் தொடக்கத்தில் ட்விட்டர் வழியே தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தினார்.
இந்நிலையில், ட்விட்டரில் இருந்து 2.5 லட்சம் கணக்குகளை தற்காலிகமாக தடை செய்ய அமெரிக்க அரசு வலியுறுத்தியதாக எலான் மஸ்க் இன்று (ஜனவரி 4 ) கூறியுள்ளார்.
இதுபற்றி பாக்ஸ் நியூஸ் வெளியிட்டு உள்ள செய்தியில், கொரோனா பெருந்தொற்றை பற்றி பல செய்திகளை வெளியிட்ட பத்திரிகையாளர்கள், அதிலும் குறிப்பிடும்படியாக, அவை உயிரி ஆயுதம் ஆக உற்பத்தி செய்யப்பட்டு பரப்பப்பட்டது, சீனாவின் உகான் ஆராய்ச்சி மையத்தில் நடந்த ஆய்வு, சி.ஐ.ஏ.வுடன் கொரோனா வைரசுக்கு தொடர்பு இருப்பது போன்று தோன்றுகிறது என்பன போன்ற பல ட்விட்டர் செய்திகளை பரப்பி விட்ட அவர்களது கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ட்விட்டரில் ரஷியாவின் தலையீடு இருப்பது போன்ற சந்தேகங்களை தொடர்ந்து, அமெரிக்க அரசு நெருக்கடி அளித்துள்ளது என குளோபல் என்கேஜ்மெண்ட் மையம் தெரிவித்து, அதற்கான முடக்கப்பட்ட கணக்குகள் விவரங்களை பட்டியலிட்டு உள்ளது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் எலான் மஸ்க்கும் இதனை ஒப்பு கொண்டுள்ளார். அதன்படி, பத்திரிகையாளர்கள், கனடா நாட்டு அதிகாரிகள் உள்பட 2.5 லட்சம் பேரின் ட்விட்டர் கணக்குகள் தற்காலிகமாக நீக்குமாறு அமெரிக்க அரசு வலியுறுத்தியதாக அவர் கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
”வாரிசு பொங்கல்” கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!
அதிமுகவில் இணைந்தார் மருத்துவர் சரவணன்!