அம்மாவுடன் சண்டை: 130 கிமீ சைக்கிளில் சென்ற சிறுவன்!

டிரெண்டிங்

தனது அம்மாவைப் பற்றி பாட்டியிடம் புகார் தெரிவிக்க சுமார் 130 கிமீ சைக்கிளில் பயணம் மேற்கொண்டிருக்கிறார் 11 வயதான சீன சிறுவன்.

கிழக்கு சீனாவின் சீஜியாங் மாகாணத்தில் உள்ள காங்சூ நகரத்தில் வசித்து வந்த 11 வயது சிறுவன் தனது தாயுடன் சண்டை போட்டுவிட்டுக் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி வீட்டை விட்டுக் கிளம்பியுள்ளார்.

அங்கிருந்து 140 கிமீ தொலைவில் மீஜியாங்கில் வசிக்கும் தனது பாட்டி வீட்டுக்குச் சென்று அம்மாவைப் பற்றி புகார் தெரிவிக்கத் தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார்.

வீட்டிலிருந்து தண்ணீரும் பிரட்டும் எடுத்துக் கொண்டு கிளம்பிய அச்சிறுவன் சோர்வடையும் போதெல்லாம் அதை உட்கொண்டு சைக்கிளை ஓட்டியுள்ளார்.

சாலையில் உள்ள பெயர்ப் பலகையை வைத்து தனது பாட்டி வீட்டை நோக்கி சென்ற சிறுவன், சில இடங்களில் வழி தெரியாமல் பல தவறான திருப்பங்களில் சென்றுள்ளார்.

இது வழக்கமாக அவர் பாட்டி வீட்டுக்குச் செல்லும் நேரத்தைக் காட்டிலும் இரு மடங்கு கூடுதல் நேரத்தை எடுத்துக்கொண்டது.

இருப்பினும், பாட்டி வீட்டை அடைய இன்னும் 10 கிமீ தூரமே இருந்துள்ளது. அதாவது 140 கிமீட்டரில், 130 கிமீ தூரத்தை அடைந்த அச்சிறுவன் ஒரு எக்ஸ்ப்ரஸ் சாலையில் சோர்வாகக் காணப்பட்டுள்ளார்.

சுமார் 22 மணி நேரம் சைக்கிளை ஓட்டியதால் சோர்வடைந்துள்ளார்.

இந்நிலையில் சாலையில் சிறுவனைக் கண்ட போலீசார், அருகில் இருக்கும் காவல் நிலையத்துக்கு காரில் அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர்.

பின்னர் சிறுவனிடம் தனது வீட்டு முகவரியைக் கேட்டு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சீன போலீசார், “சிறுவன் தனது இலக்கை அடைய இன்னும் ஒரு மணி நேர தொலைவுதான் இருந்தது. அவர் நடக்கக் கூட முடியாத அளவுக்கு மிகவும் சோர்வுடன் காணப்பட்டார்.

சிறுவனின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது பாட்டியும், அம்மாவும் வந்து சிறுவனை அழைத்துச் சென்றனர்” என கூறியுள்ளனர்.

சிறுவனின் தாய் கூறுகையில், “கோபத்தில் பாட்டி வீட்டுக்கு செல்வதாக மிரட்டினான்.

கோபத்தில் தான் சொல்கிறான், போகமாட்டான் என்று நினைத்துவிட்டேன்” என தெரிவித்துள்ளார்.

சிறுவனின் இந்த பயணம் குறித்து இணையவாசிகள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அதில் ஒருவர், “சிறுவனின் பாட்டி அவரது அம்மாவுக்கு எப்படி பாடம் புகட்டினார் என்பதை அறிய விரும்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

மற்றொருவர், “இந்த குழந்தை ஒரு அறிவாளி. இரவு நேரத்தில் சாலை பதாகைகளை வைத்தே பாட்டி வீட்டுக்கு செல்லும் வழியை கண்டுபிடித்துள்ளார்” என பாராட்டியுள்ளார்.

பிரியா

அதிகரிக்கும் விமானப் பயணங்கள்: மார்ச் மாதத்தில் 17.31 லட்சம் பேர்!

பட்டதாரிகள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள்: கர்நாடக தேர்தலில் அதிரடி காட்டும் பாஜக!

Chinese Boy Cycles 130km
+1
0
+1
2
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *