சில்லி சிக்கன், சில்லி பரோட்டா, சில்லி இட்லி வரிசையில் சில்லி பனீருக்கும் தனியிடம் உண்டு. அனைவருக்கும் ஏற்ற இந்த சில்லி பனீர் வீட்டில் இருக்கும் குழந்தைகளும், திடீர் விருந்தினர்களுக்கும் ஹெல்த்தியான சிறந்த மாலை நேர சிற்றுண்டியாகவும் இருக்கும்.
என்ன தேவை?
பனீர் – 200 கிராம்
மைதா மாவு – 75 கிராம்
கார்ன்ஃப்ளார் மாவு – 25 கிராம்
பெரிய வெங்காயம் – ஒன்று
குடமிளகாய் – ஒன்று
பச்சை மிளகாய் – 4
இஞ்சி – ஒரு டீஸ்பூன்
பூண்டு – 4 பல்
செலரி தண்டு – ஒரு டேபிள்ஸ்பூன்
வெங்காயத்தாள் – 2 டேபிள்ஸ்பூன்
சிவப்பு மிளகாய் சாஸ் – 1 டேபிள்ஸ்பூன்
சோயா சாஸ் – 2 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
உப்பு – அரை டீஸ்பூன் (மாவு கலவைக்கு)
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
தண்ணீர் – 50 மில்லி
எப்படிச் செய்வது?
பனீரை சதுரமாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, செலரி, பச்சை மிளகாய் ஆகியவற்றைப் பொடியாகவும், குடமிளகாய் மற்றும் வெங்காயத்தை சதுரமாகவும் நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, கார்ன்ஃப்ளார் மாவு, அரை டீஸ்பூன் உப்பு, மிளகுத்தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும். இதில் நறுக்கிய பனீரை முக்கியெடுத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
மற்றொரு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் இஞ்சி, பூண்டு சேர்த்து பச்சை வாசனை போனதும் செலரி, பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும். இத்துடன் வெங்காயம், குடமிளகாய் சேர்த்து வதக்கிய பிறகு சிவப்புமிளகாய் சாஸ், சோயா சாஸ், உப்பு, தண்ணீர் என ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வேகவிடவும். இந்தக் கலவை கொதித்து வந்ததும், இத்துடன் பொரித்தெடுத்த பனீரைச் சேர்த்து நன்றாகக் கிளறி கலவை பனீரோடு சேர்ந்து வரும் வரை இரண்டு நிமிடம் சிம்மில் வேகவிட்டு இறக்கவும். இதில், நறுக்கிய வெங்காயத்தாள் தூவிப் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: காட்டேஜ் சீஸ் சாலட்!
சண்டே ஸ்பெஷல்: சுயமாக டயட் இருக்கிறீர்களா? இந்த விஷயங்களில் கவனம் தேவை!
இங்க வடை, அங்க சப்பாத்தியா? அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: காமராஜர் ஆட்சி… செல்வப் பெருந்தகை டூர்… காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் மாற்றம்!