நவம்பர் 14 குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் நிலையில் இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி அனைவரது இதயங்களையும் கவர்ந்திருக்கிறது.
ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினமான நவம்பர் 14 குழந்தைகள் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. “குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள் மழலைச்சொல் கேளாதவர்” என்று சொன்னார் வள்ளுவர்.
குழலையும், யாழையும் விட இனிமையானது குழந்தைகளின் மழலை மொழி. அதைவிட அவர்களது புன்னகை என்பது உலகத்தின் மொத்த கவலைகள் அனைத்தையும் மறக்கச் செய்யும் ஒன்று.
மனிதர்களில் மட்டுமல்ல விலங்கு, பறவை என அனைத்து ஜீவராசிகளிலுமே குழந்தைப் பருவத்தில் செய்யும் செயல் அனைவரையும் ரசிக்க வைக்கத்தான் செய்யும்.
அந்த வகையில் ஒரு குரங்கு குட்டியும், 5 பறவை குஞ்சுகளும் செய்யும் சேட்டைகளை காட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பலரது மனங்களை கவர்ந்திருக்கிறது.
இந்திய வன சேவை அதிகாரியான சுசாந்தா நந்தா என்பவர் ட்விட்டரில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
அதில் ஒரு குரங்கு குட்டியும், 5 பறவைக் குஞ்சுகளும் ஒன்றாக இருக்கின்றன. அவை பச்சை பசேல் என்ற புல்லின் மீது ஓடியாடி விளையாடுகின்றன.
குரங்கு குட்டி ஓட அதைப் பின்தொடர்ந்து பறவைக்குஞ்சுகளும் ஒடுகின்றன. ஒருகட்டத்தில் களைத்துப்போன குரங்கு குட்டி தூங்கிப்போக, பறவைக்குஞ்சுகள் குரங்கின் மீது படுத்துறங்குகின்றன.
அன்பும், அழகும் நிறைந்திருக்கும் இந்த வீடியோவைப் பார்க்கும் எவருக்கும் ஒரு நிமிடம் முகத்தில் புன்னகை வந்துவிட்டுத்தான் செல்கிறது.
கலை.ரா
10% இட ஒதுக்கீடு: மௌனம் கலைத்த ஓபிஎஸ்
மக்கள் படகில் செல்வதை ஸ்டாலின் பார்க்கவில்லையா?: களத்தில் எடப்பாடி