தோனி ரசிகர் ஒருவர் தனது திருமண அழைப்பிதழில் தோனி புகைப்படத்துடன் அவரது ஜெர்சி எண் 7 என்பதை அச்சிட்டுள்ளார்.
அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் தோனி ஓய்வு பெற்றாலும் சென்னை அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் போட்டிகளின் போது தோனி….தோனி…என்று மைதானம் அதிரும் அளவிற்கு ரசிகர்கள் கோஷம் எழுப்பி தோனியை வரவேற்றனர்.

அவர்களது எண்ணமெல்லாம் தோனி களமிறங்கி ஒரு சிக்ஸ்சராவது அடித்து தங்களை மகிழ்விக்க வேண்டும் என்பது தான். தோனிக்கு இது கடைசி போட்டி என்று பேச்சுக்கள் எழுந்த நிலையில் ரசிகர்களின் அன்பான கோரிக்கையினால் ஐபிஎல் போட்டியில் தனது ஓய்வு முடிவை சற்று தள்ளி வைத்துள்ளார்.
ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றி வெற்றி கொண்டாட்டங்கள் ஓய்ந்த நிலையில், சத்தீஸ்கரை சேர்ந்த தோனி ரசிகர் ஒருவர் அவரது திருமண அழைப்பிதழில் தோனி புகைப்படத்தை அச்சடித்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து Shivsights என்ற ட்விட்டர் பயனர், “சிஎஸ்கே அணியின் மஞ்சள் ஃபீவர் இன்னும் குறையவில்லை.
சத்தீஸ்கரை சேர்ந்த தோனி ரசிகர் தனது திருமண அழைப்பிதழில் தோனி புகைப்படம் மற்றும் அவரது ஜெர்சி எண் 7 ஆகியவற்றை அச்சடித்துள்ளார்.
மேலும் அந்த ரசிகர் தோனிக்கு அழைப்பிதழ் அனுப்பியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த திருமண அழைப்பிதழை தோனி ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
செல்வம்
“லோகோபைலட் பிரேக் அடிக்கலனா…” : தமிழ்நாட்டு பயணிகளின் திக் திக் நிமிடங்கள்!
ஒடிசா ரயில் விபத்து: உலக தலைவர்கள் இரங்கல்!
“ரயில் விபத்துக்கு யார் பொறுப்பு?” – ஆ.ராசா கேள்வி!
சென்னை – ஒடிசா : கண்ணீருடன் புறப்பட்ட உறவினர்கள்!