இந்திய ஓபன் பி அணியில் தமிழக வீரர் பிரக்யானந்தா சுவிட்சர்லாந்தை சார்ந்த யானிக் உடன் இன்று (ஜூலை 31) செஸ் ஒலிம்பியாட்டில் விளையாடினார்.

கருப்பு நிற காய்களுடன் களம் இறங்கிய பிரக்ஞானந்தா 67 வது நகர்த்தலில் சுவிட்சர்லாந்து வீரர் யானிக்கை வீழ்த்தினார்.
பிரக்ஞானந்தா வெற்றியின் மூலம் சுவிட்சர்லாந்து அணியை 4-0 என ஓயிட்வாஷ் செய்தது இந்திய ஓபன் B அணி.
இந்திய பெண்கள் A அணி 3-1 என்ற புள்ளிக்கணக்கில் இங்கிலாந்த்தை வீழ்த்தினார்.

இந்திய பெண்கள் A அணி சார்பில் தமிழக வீராங்கனை வைஷாலி விளையாடினார்.
இங்கிலாந்து வீராங்கனை டோமாவுடன் வைஷாலி மோதினார்.
வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய வைஷாலி 65 வது நகர்த்தலில் இங்கிலாந்து வீராங்கனையை வீழ்த்தினார். பிரக்ஞானந்தாவின் உடன் பிறந்த அக்காதான் வைஷாலி என்பது குறிப்பிடத் தக்கது.
இன்று வெற்றி பெற்றபோதும், தனது ஆட்டத் திறன் குறைந்திருந்ததாகவும் அதை மேம்படுத்துவேன் என்றும் பிரக்ஞானந்தா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்