சிலருக்கு எழுபது வயதிலும் நிறைந்த ஆரோக்கியம் இருக்கும். ஒரு சிலருக்கு முப்பது வயதுக்கு மேல் சில உடல் உபாதைகள் ஏற்படத் தொடங்கி நாற்பதில் ஒரு வியாதியஸ்தராக மாறிப் போயிருப்பர்.
எனவே நாற்பது வயதுக்கு மேல் உடல்நலத்தில் அக்கறை எடுத்து, தேவையான ஹெல்த் செக் அப் செய்து கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக நாற்பது வயதில் ஆண்களுக்கு இதய நோய் ஏற்படுகிறது என்கிறது ஒரு சமீபத்திய ஆய்வு.
இதற்குக் காரணம் மன அழுத்தம், வேலையில் ஏற்படக் கூடிய ஸ்ட்ரெஸ், உணவுகளில் அக்கறை காட்டாததால் ஏற்படும் உடல் பருமன் போன்றவையாகும்.
மேலும் சிலருக்கு, இளம் வயதிலேயே தலைமுடி நரைத்து விடும் அல்லது வழுக்கை விழும். இதுவும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கான ஓர் அறிகுறி என்கிறது அந்த ஆய்வு.
இந்தியாவில் 40 வயது நிறைந்த ஆண்கள் இரண்டாயிரம் பேரை ஒருங்கிணைத்து ஆய்வொன்றினை மேற்கொண்டனர்.
ஆய்வு முடிவில் தலைமுடி அதிகம் இருப்பவர்களை விட, இளநரை அல்லது வழுக்கை விழுந்த ஆண்களுக்கு இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் அதிகம் வந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்குக் காரணம் வாழ்வியல் பிரச்சினைகள், அதிகரித்து வரும் மன அழுத்தப் பிரச்சினைகள் என்றனர் ஆய்வாளர்கள்.
வேலை செய்யாமல் வாழ முடியாது. எனவே, வேலை சார்ந்த மன அழுத்தம் என்பது இன்றைய தினத்தின் மாற்றி அமைக்க முடியாத ஒன்றாகி விட்டது. ஆனாலும் அதில் கவனத்துடன் செயல்பட முடியும்.
உணவு விஷயங்களில் கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். அதிக கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தம் போன்ற ஆபத்து காரணிகளை அது குறைக்கச் செய்யும்.
எதிலும் வேகம் என்றில்லாமல் சற்று நிதானமான முறையில் ஒருவரது வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டால் வளமுடன் வாழலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
LSGvsPBKS : மாற்றப்பட்ட கேப்டன்… முதல் வெற்றியை பதிவு செய்த லக்னோ அணி!
GOAT: படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது?
டிஜிட்டல் திண்ணை: ED க்கு மோடியின் அவசர அசைன்மென்ட்- அலர்ட் ஸ்டாலின்