சென்னையில் பிறந்த இந்திய வம்சாவளிக்கு கிராமி விருது!

Published On:

| By christopher

Chandrika Tandon got Grammys 2025

இந்திய வம்சாவளி பாடகியான சந்திரிகா டன்டன் தனது ’த்ரிவேணி’ ஆல்பத்திற்காக இந்தாண்டுக்கான கிராமி விருதை வென்றார். Chandrika Tandon got Grammys 2025

உலகளவில் இசைத்துறையில் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றாக ’கிராமி விருது’ உள்ளது. இதனை கையில் ஏந்துவதை உலகம் முழுவதும் உள்ள இசைக்கலைஞர்கள் தங்கள் வாழ்நாள் லட்சியமாக கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்தாண்டுக்கான கிராமி விருது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இன்று நடைபெற்று வருகிறது.

இதில், அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான பாடகி சந்திரிகா டன்டன், தனது ’த்ரிவேணி’ இசை ஆல்பத்திற்காக ’சிறந்த தற்கால ஆல்பம்’ (BEST NEW AGE ALBUM) என்ற பிரிவில் கிராமி விருதை வென்றுள்ளார்.

புல்லாங்குழல் இசைக்கலைஞரான வௌட்டர் கெல்லர்மேன் மற்றும் ஜப்பானிய செல்லிஸ்ட் எரு மாட்சுமோட்டோ ஆகியோருடன் இணைந்து இந்த விருதை வென்றார்.

யார் இந்த சந்திரிகா கிருஷ்ணமூர்த்தி? Chandrika Tandon got Grammys 2025

சென்னையில் பிறந்த சந்திரிகா கிருஷ்ணமூர்த்தி டன்டன், சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் (MCC) பட்டப்படிப்பை முடித்தவர். இவர் உலக அளவில் மிகப்பெரும் சந்தையை கொண்டுள்ள பெப்சிகோ நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி இந்திரா நூயியின் மூத்த சகோதரி ஆவார்

கல்லூரி படிப்பிற்கு பின்னர் திருமணம் முடிந்து கணவர் ராஜன் டன்டனுடன் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்த அவர் அங்கு தொழில்துறைகளில் ஈடுபட்டு ஒருமுக்கியப் புள்ளியாக உருவானார்.

தனது தொழில்களுக்கு நடுவே இசை மற்றும் பாடல்கள் அமைப்பதிலும் தீவிரம் காட்டி வந்த அவர் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி த்ரிவேணி ஆல்பத்தை வெளியிட்டார். அதற்காக தான் தற்போது கிராமி விருது பெற்றுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “ இந்தப் பிரிவில் எங்களுக்கு அற்புதமான இசைக்கலைஞர்கள் இருந்தனர். நாங்கள் இதை வென்றது எங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த தருணம்” என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share