2023 யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்கள் லிஸ்ட் இதோ!

டிரெண்டிங்

ஒவ்வொரு ஆண்டும் யூடியூப் நிறுவனமானது இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்கள், பாடல்கள், கிரியேட்டர்கள், வீடியோ கேம்கள் உள்ளிட்ட விவரங்களை வெளியிடும்.

அந்தவகையில் 2023 ஆம் ஆண்டு முடிவடையும் நிலையில், இந்தியாவில் யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்கள், கேம்கள், பாடல்கள், கிரியேட்டர்கள் உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, சந்திரயான்-3 மிஷன் நிலவில் தரையிறக்கம் செய்யப்பட்ட நேரலை வீடியோவை 85 லட்சம் பேர் ஒரே நேரத்தில் பார்த்துள்ளனர்.

சந்திரயான்-3 தரையிறங்கும் வீடியோவை தொடர்ந்து, ரவுண்ட் 2 ஹெல் என்ற நகைச்சுவைக் குழுவின் மென் ஆன் மிஷன் வீடியோ அதிகம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. இதேபோல, ஸ்டாண்டப் காமெடி, பிக் பாஸ் பகடி வீடியோ, யுபிஎஸ்சி தேர்வு வீடியோக்கள் முதல் 15 இடங்களை பிடித்துள்ளது.

கேமிங் வீடியோக்களை பொறுத்தவரையில் GTA முதலிடத்தையும், அதைத் தொடர்ந்து Minecraft, Garena Free Fire மற்றும் Granny ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

யூடியூப் கிரியேட்டர்களில் உடற்பயிற்சி பயிற்சியாளர் பவன் சாஹு முதலிடத்தையும் அவரைதொடர்ந்து நீது பிஷ்ட், சாகர்ஸ் கிச்சன் மற்றும் ஷாவ் கிரார் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

பாடல்கள் தரவரிசையில் பவன் சிங்கின் “தானி ஹோ சப் தான்” என்ற போஜ்புரி பாடல் யூடியூப் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. இதனை தொடர்ந்து “தேரே வாஸ்தே”, “பல்சர் பைக்”, “ஜெயிலர்” மற்றும் “ஹீரியே” படத்தின் பாடல்கள் முதல் 15 இடங்களை பிடித்துள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டிடிவி தினகரன் பிறந்தநாள்: கூட்டணி வடிவம் பெறுமா வாழ்த்து?

ராமஜெயம் கொலைக்கு கார் கொடுத்தவர் கொலையா? உண்மை என்ன? திருச்சி திகில்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0