ஒருவழியாக முடிவு: சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா எங்கே விளையாடுகிறது?

Published On:

| By Minnambalam Login1

சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஹைபிரிட் மாடலில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் ஒப்புக் கொண்டுள்து.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடக்கவுள்ளது. இந்த தொடர் பாகிஸ்தானில் நடக்கவுள்ளதால், இந்திய அணி பங்கேற்க மறுத்து விட்டது.

இதனால் பிசிசிஐ சார்பாக ஆசியக் கோப்பையை போல் ஹைபிரிட் மாடலில் சாம்பியன்ஸ் டிராபியை நடத்தும் யோசனை முன் வைக்கப்பட்டது. இதனை அனைத்து நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் ஏற்ற நிலையில், பாகிஸ்தான் மட்டும் ஏற்கவில்லை.

ஆனால், இந்தியாவும் தன் முடிவில் உறுதியாக இருந்தது. இதையடுத்து, நேற்று ஐசிசி தலைவர் ஜெய்ஷா தலைமையில் நடந்த கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறும். அந்த வகையில்,பாகிஸ்தான் இந்தியா மோதும் ஆட்டமும் துபாயில்தான் நடைபெறவுள்ளது.

முன்னதாக, இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லையென்றால், வருங்காலத்தில் இந்தியாவில் நடைபெறும் ஐசிசி போட்டிகளில் பங்கேற்க மாட்டோம் என்று மிரட்டி பார்த்தது. ஆனால், எதுவும் பலிக்கவில்லை என்பதால் தற்போது இந்த முடிவுக்கு ஒப்புக் கொண்டுள்ளது.

அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் பெண்கள் உலகக் கோப்பை இந்தியாவில் நடக்கிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்க வேண்டுமென்றால் ஹைப்ரிட் மாடலில்தான் நடக்க வேண்டுமென்று பாகிஸ்தான் அணி அறிவுறுத்தியுள்ளது.

அதே போல, 2026 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரை இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்துகின்றன. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்கும் போட்டிகள் இலங்கையில்தான் நடத்த வேண்டுமென்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பதிலுக்கு கோரிக்கை வைத்துள்ளது. இந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வது குறித்து ஐசிசி இன்னும் முடிவெடுக்கவில்லை.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

-எம்.குமரேசன்

தங்கம் விலை இவ்வளவு குறைஞ்சிடுச்சா?- குஷியில் நகைப் பிரியர்கள்!

துடுப்பு போடாமல் படகில் பயணம்… ஆதவ் அர்ஜூனாவுக்கு விசிகவில் வலுக்கும் எதிர்ப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share