சாம்சங் மொபைல் போன் பயன்படுத்துபவர்கள் சைபர் அட்டாக்கிலிருந்து தப்பிக்க தங்களது மொபைல் போனில் உள்ள OS மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை உடனடியாக அப்டேட் செய்ய வேண்டும் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையாக இருப்பதால் பலரது விருப்பமாக சாம்சங் மொபைல் போன் உள்ளது. இந்தநிலையில், சாம்சங் மொபைல் போன் ஆண்டிராய்டு வெர்சஷன்ஸ் 11,12,13,14 ஆகிய மாடல்களில் சைபர் அட்டாக் நடப்பதாக பயனர்கள் தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.
இந்தநிலையில், சாம்சங் மொபைல் போன் பயனர்கள், தங்களது மொபைலில் உள்ள OS மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை உடனடியாக புதுப்பிக்குமாறு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கணினி அவசர பதில் குழு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சாம்சங் மொபைல் போன் தயாரிப்புகளில் பல்வேறு சைபர் அட்டாக் நடப்பதாக தெரியவந்துள்ளது. இதன் மூலம் எளிதாக உங்கள் மொபைல் போனில் உள்ள தரவுகளை திருடமுடியும். அதேசமயம் உங்கள் அனுமதியில்லாமல் மொபைல் போனை இயக்க முடியும். பயனர்களுக்கு அச்சுறுத்தல் பன்மடங்கு உள்ளது.
சாம்சங் மொபைல் போன் OS இன் SmartManagerCN கூறுகளில் உள்ள முறையற்ற அணுகல் கட்டுப்பாட்டு குறைபாடு காரணமாக இந்த சைபர் அட்டாக் ஏற்படுகிறது. இதனால் உங்கள் சாம்சங் மொபைல் போனில் OS மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை உடனடியாக அப்டேட் செய்யுங்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கைதிகள் பற்களை பிடுங்கிய விவகாரம்: பல்வீர் சிங்குக்கு ஜாமீன்!
நேரம் வீணடிப்பு : அதிமுக வழக்கில் நீதிபதி அதிருப்தி!
pharmacie en ligne pas cher [url=https://pharmaciepascher.pro/#]Achat mГ©dicament en ligne fiable[/url] trouver un mГ©dicament en pharmacie
Viagra 100mg prix: viagra en ligne – Viagra 100 mg sans ordonnance