நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் நாட்டு மக்கள் பலரும் வீடுகள் இன்று காலை முதல் தேசிய கொடியை ஏற்றி வருகின்றனர். அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அதுபோன்று மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், திரைப் பிரபலங்கள் என பலரும் தங்களது சமூக வலைதள முகப்பு பக்கங்களை தேசியக்கொடியாக மாற்றி வருகிறனர்.
நேற்று தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில், பிரதமரின் வேண்டுகோளை ஏற்று தேசியக்கொடி ஏற்றினார்.

இதனைப்போல இந்தி நடிகர் ராஜ்குமார் ராவ் தனது வீட்டில் தேசியக்கொடியை ஏற்றியுள்ளார்.
இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நடிகர் மாதவன் ட்விட்டரில், “சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளை நினைவு கூறும் வகையில் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் ஆகஸ்ட் 13 முதல் 15-ம் தேதி வரை தேசியக்கொடி ஏற்ற வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
தெலுங்கு நடிகர்கள் மகேஷ்பாபு, பிரபாஸ் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று தங்களது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நடிகை சுஷ்மிதா சென் இன்ஸ்டாகிராமில் தேசியக்கொடியை அனைவரது வீடுகளிலும் ஏற்ற வேண்டும் என்று போஸ்ட் செய்துள்ளார்.

காளஹஸ்தி சிவன் கோயில் கோபுரத்திலும் தேசிய கொடி ஏற்றப்பட்டது.
செல்வம்