குஜராத் பாலம் அறுந்து விழுந்த சிசிடிவி காட்சி!
குஜராத்தில் 142 பேரை பலி வாங்கிய மோர்பி பாலம் அறுந்து விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருக்கிறது.
குஜராத் மாநிலத்தில் மோர்பி என்ற இடத்தில் மச்சு ஆற்றின் மீது கட்டப்பட்ட கேபிள் தொங்கு பாலம் நேற்று(அக்டோபர் 30) அறுந்து விழந்தது. இதில் பாலத்தின் மீது நின்றிருந்த சுமார் 500 பேர் நீரில் விழுந்தனர். அதில் இதுவரை 142 பேர் உயிரிழந்து இருக்கின்றனர்.
100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பாலம் புனரமைக்கப்பட்டு 4 நாட்களுக்கு முன்பு தான் திறக்கப்பட்டது. அதற்குள் விபத்து நடந்தது எப்படி என்ற கேள்வி எழுந்தது.
நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமானோர் ஒரே நேரத்தில் பாலத்தின் மீது குவிந்திருக்கின்றனர். அப்போது பாரம் தாங்காமல் பாலம் அறுந்து விழுந்துள்ளது. அந்தக் காட்சிகள் தற்போது வெளியாகி இருக்கின்றன.
150 பேர் வரை மட்டுமே அந்த பாலத்தின் மீது அனுமதிக்கப்படவேண்டும். ஆனால் ஒட்டுமொத்தமாக இவ்வளவு பேர் எப்படி சென்றார்கள் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
கப்பற்படை, தீயணைப்புத்துறை, தேசிய பேரிடர் மீட்புபடையினர், காவல்துறையினர் என பல்வேறு தரப்பினரும் இணைந்து நீரில் மூழ்கியவர்களை தேடி வருகின்றனர். விபத்து நடந்து 12 மணி நேரத்திற்கு மேலாகிவிட்டதால் நீரில் மூழ்கியவர்கள் உயிருடன் இருப்பார்களா என்பது சந்தேகமே.
கலை.ரா
ட்விட்டர் புளூ டிக் – இனி மாதம் ரூ. 1600 கட்டணம்?
மழையின் தீவிரம் அதிகரிக்கும்: வெதர்மேன்!