பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தனது நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டது தொடர்பாக அவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகரும் , தீபிகா படுகோனின் கணவருமான ரன்வீர் சிங் வித்தியாசமான ஸ்டைலில் பல்வேறு புகைப்படங்களை அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அது சில சமயங்களில் பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தி விடும் அதே போல் தான் தற்போது அவர் வெளியிட்டுள்ள நிர்வாண புகைப்படமும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் “ பேப்பர் மேகஸின் ” என்ற வார இதழுக்கு உடலில் ஒட்டுத்துணி கூட இல்லாமல் நிர்வாணமாக ரன்வீர் சிங் கொடுத்துள்ள புகைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களும் , விமர்சனங்களும் எழுந்து வருகிறது.
இதற்கு முன்பு 2017 ஆம் ஆண்டு ஒரு ஆணுறை விளம்பரத்தில் நடித்தார் ரன்வீர் சிங். மாடலாக இருந்த போது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், ‘நான் இதுவரை 26 பெண்களிடம் செக்ஸ் வைத்திருக்கிறேன். இருந்தாலும் எனக்கு ஆழமான நட்பிலும் காதலிலும் நம்பிக்கை இருக்கிறது’ என்று அவர் கூறியது அப்போது பெரும் சர்ச்சையாக மாறியது.
இந்நிலையில், இந்த நிர்வாணப் படங்கள் தொடர்பான விமர்சனங்களுக்கு பதில் அளித்த ரன்வீர் சிங், “எல்லோர் முன்னிலையிலும் நிர்வாணப் படங்களுக்கு போஸ் கொடுப்பது எனக்கு ஒன்றும் கடினம் அல்ல. இந்த புகைப்படங்களில் எனது ஆன்மாவை பார்க்க முடியும். ஆயிரக்கணக்கான மக்களுடன் கூட நிர்வாணமாக இருக்க முடியும். ஆனால், சங்கடப்பட்டால் எதுவும் செய்ய முடியாது” என்றார்.
இதையடுத்து ரன்வீர் சிங் தனது நிர்வாண புகைப்படங்களை, சமூகவலைதளத்தில் பதிவிட்டதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மும்பையில் இருக்கும் செம்பூர் போலீஸ் நிலையத்தில் ஓர் என்.ஜி.ஓ. சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
“ரன்வீர் சிங் வெளியிட்ட புகைப்படங்கள் பெண்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலும் பெண்களின் நாகரீகத்தை அவமதிக்கும் வகையிலும் அமைந்துள்ளது. எனவே ரன்வீருக்கு எதிராக ஐடி சட்டத்தின் 67A பிரிவின் கீழ் இந்திய தண்டனைச் சட்டம் 292, 293, 354 மற்றும் 509 ஆகிய பிரிவுகளுடன் சேர்த்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த புகார் பற்றி விசாரித்து வருவதாகவும் விசாரணைக்குப் பின்னரே எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படும் என்றும் போலீஸ் அதிகாரிகளை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
இதேபோல் ‘வெண்ணிலா கபடி குழு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான விஷ்ணு விஷால் ( ஜூலை 23 ) ஆம் தேதி இதே போன்ற புகைப்படத்தை வெளியிட்டு “ நானும் ட்ரெண்டிங்கில் இருக்கிறேன். இந்த புகைப்படத்தை எடுத்தது என் மனைவிதான் என்றும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தற்போது தமிழகத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
“இதெல்லாம் ஒரு ட்ரெண்டிங்காப்பா ” என்று நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர். ரோட்டில் நிர்வாணமாகத் திரிந்தால் அவரை மனநிலை சரியில்லாதவர் என்று சொல்லும் உலகம், இணையத்தில் அலைந்தால் ட்ரெண்டிங் ஆக்குகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்