மாஸ் காட்டிய பவன் கல்யாண்: கேஸ் போட்ட போலீஸ்!

டிரெண்டிங்

காரின் மேற்கூரையின் மீது அமர்ந்து வேகமாக வாகனத்தில் பயணித்த தெலுங்கு சினிமா பவர் ஸ்டாரும், ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த நவம்பர் 5ஆம் தேதி பவன் கல்யாண், ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள இப்பட்டம் கிராமத்தில் சாலைகளை அகலப்படுத்துவதால் இடிக்கப்பட்ட வீடுகளையும், அங்கு வசித்த மக்களையும் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக, தனது ஆதரவாளர்களுடன் காரின் மேற்கூரையில் அமர்ந்து பயணித்தார்.

பவன் கல்யாண் வாகனத்தை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் பயணித்தனர். பவன் கல்யாண் பயணித்த காரின் பக்கவாட்டில் அவரது பாதுகாப்பு அதிகாரிகள் ஆபத்தான முறையில் பயணம் செய்தனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பலரும் பவன் கல்யாண் சினிமா பாணியில் காரில் பயணிப்பதாக விமர்சனம் செய்திருந்தனர்.

இந்தநிலையில், ஆந்திர மாநிலம் தெனாலி பகுதியைச் சேர்ந்த சிவகுமார் தடபள்ளி காவல்நிலையத்தில் பவன் கல்யாண் மற்றும் அவரது ஓட்டுநர் மீது புகாரளித்தார்.

அந்த புகார் மனுவில், பவன் கல்யாண் தனது ஆதரவாளர்களுடன் வாகனத்தில் வேகமாக சென்றதால், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த சிவ குமார் நிலைதடுமாறி கீழே விழுந்ததாக தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், தடபள்ளி காவல் நிலையத்தில், வாகனத்தை வேகமாக இயக்குதல், பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் பவன் கல்யாண் மற்றும் அவரது ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பவன் கல்யாண் மீது வழக்குப்பதிவு செய்தது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

செல்வம்

T20 WorldCup Final : உலகக் கோப்பையை கைப்பற்ற போவது யார்?

சிறைச்சாலை நரகமா? பல்கலைக் கழகமா? : நளினி பதில்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0