கேரட்டில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளதால் கோடையில் ஏற்படும் கண் வறட்சியைத் தடுக்கும். சருமத்துக்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவும். அப்படிப்பட்ட கேரட்டில் மில்க் ஷேக் செய்து இந்த கோடையைக் குளுமையாக்குங்கள்.
என்ன தேவை?
பால் – 150 மில்லி
துருவிய கேரட் – 100 கிராம்
சர்க்கரை – தேவையான அளவு
தண்ணீர் – 50 மில்லி
வெனிலா ஐஸ்க்ரீம் – 50 கிராம்
ஐஸ் க்யூப் – 5
எப்படிச் செய்வது?
மிக்ஸியில் கேரட்டை மட்டும் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும். இத்துடன் பால், சர்க்கரை, தண்ணீர், ஐஸ்க்ரீம் சேர்த்து மீண்டும் மிக்ஸியில் நன்றாக சுழற்றியெடுக்கவும். இதை ஒரு கிளாஸ் டம்ளரில் ஊற்றி, ஐஸ் க்யூப்ஸ் சேர்த்துப் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : சீஸ் பால்ஸ்!
கிச்சன் கீர்த்தனா : சில்லி பனீர்!
உலக அளவில் அதிக முறை இணையத்தளம் முடக்கப்பட்ட நாடுகள்: இந்தியாவின் சாதனை!
விராட் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் அசாம்