சூப், சாலட், பொரியல், ஜூஸ் என்று பல்வேறு உணவுகள் செய்ய மூலப் பொருளாகப் பயன்படுத்தப்படும் கேரட்டில் ஃப்ரைஸ் செய்தும் அசத்தலாம். கேரட் வேண்டாம் என்று ஒதுக்குபவர்களும் இந்த கேரட் ஃப்ரைஸை விரும்பி சுவைப்பார்கள்.
என்ன தேவை?
கேரட் – 300 கிராம் (அல்லது பெரிய கேரட் – 2)
ரீஃபைண்டு ஆயில் – 4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன்
சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
வடிகட்டிய கெட்டித்தயிர்/மேயோ – அரை கப்
எப்படிச் செய்வது?
கேரட்டை சுத்தம் செய்து விரல் நீளத் துண்டுகளாக நறுக்கவும். இதர பொருள்களை இதனுடன் கலந்து வைக்கவும். ஒரு பேக்கிங் ட்ரேயில் அருகருகே அடுக்கி, 130 டிகிரியில், 45 நிமிடங்கள் க்ரில் செய்து எடுக்கவும். இதை எண்ணெயில் பொரித்தெடுக்கலாம். கெட்டித்தயிர்/ மேயோவுடன் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: அவரைப்பருப்பு சாதம்!
கிச்சன் கீர்த்தனா: வேர்கடலை லட்டு!
பிஎஃப்ஐ உறுப்பினர்களுக்கு ஜாமீன்: ஐகோர்ட் உத்தரவை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட்!
மோடி ஜி கோவில்: அப்டேட் குமாரு