கார் வடிவில் வீட்டின் வெளிப்புற கேட்டை அமைத்தவரை தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா பாராட்டியுள்ளார்.
மகேந்திரா குழுமத்தின் சேர்மேனாக இருக்கும் ஆனந்த் மகேந்திரா தொழிலில் எந்தளவிற்கு ஈடுபாட்டுடன் இருக்கிறாரோ, அதே அளவு சமூக ஊடகங்களிலும் ஆக்டிவாக இருப்பவர்.
தனது ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி இளைஞர்கள் மேற்கொள்ளும் புது புது முயற்சிகளை பாராட்டி ஊக்கப்படுத்துவதுண்டு.
தற்போது, நபர் ஒருவர் தனது வீட்டின் வெளிப்புற கேட்டை கார் வடிவத்தில் அமைத்திருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.
இந்த கேட் காரின் இரு பகுதியைக் கொண்டு இரும்பு கேட் உடன் இணைக்கப்பட்டிருக்கிறது. வீட்டின் உள்ளே செல்லவும், வீட்டிலிருந்து வெளியே செல்லவும் காரின் கதவைத் திறந்து செல்வது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆனந்த் மகேந்திரா ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து, அந்த முயற்சியைச் செய்த நபரை பாராட்டியுள்ளார்.
“1, இந்த நபர் ஒரு தீவிர கார் பிரியரா?. 2, யாரும் தனது வீட்டிற்குள் நுழைய விரும்பாத சிந்தனையாளரா?, 3. நகைச்சுவை உணர்வுடன் கூடிய புதுமையான நபரா 4. இல்லை மேலே உள்ள அனைத்துமா, என்று 4 ஆப்ஷன்களை ஆனந்த் மகேந்திரா கொடுத்துள்ளார்.
இந்த நான்கு ஆப்ஷன்களில் நீங்கள் எதனை தேர்ந்தெடுப்பீர்கள் என்பது போல் ஆனந்த் மகேந்திராவின் ட்விட் அமைந்துள்ளது.
மேலும் ஆனந்த் மகேந்திராவின் இந்த ட்விட்டிற்கு பலரும் கார் வடிவிலான கேட் குறித்து தங்களது கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
மோனிஷா
ஜாலியோ ஜிம்கானா: இனி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பணம் சம்பாதிக்கலாம்!