ஆண்டின் துவக்கத்தில் புதிய கார் வாங்குவது என்பது மிடில் கிளாஸில் கணிசமானவர்களின் விருப்பமாகும். அதேபோல, தை பொங்கல் விழாவின் போதும் பலரும் புதிய கார்கள் வாங்குவார்கள். ஆனால் 2024-ஆம் ஆண்டில் கார் வாங்க போகிறவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது.
ஆம்… வரும் ஜனவரி 2024 முதல் மாருதி சுசுகி, ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ், மகேந்திரா, ஹோண்டா உள்ளிட்ட முன்னனி நிறுவனங்கள் கார்களின் விலையை உயர்த்தியுள்ளன.
இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை கார்களின் விலையை நிறுவனங்கள் உயர்த்துவார்கள். அந்தவகையில், இந்த ஆண்டு பணவீக்கம் மற்றும் பொருட்களின் விலை உயர்வு காரணமாக கார் விலையை உயர்த்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தருண் கார்க் கூறும்போது, “வாடிக்கையாளர்களின் செலவுகளை முடிந்தவரை நாங்கள் குறைக்க முயற்சி செய்வோம். இருப்பினும் உள்ளீட்டு செலவுகள் அதிகரிப்பின் காரணமாக கார் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வரும் ஜனவரி 1, 2024-ஆம் ஆண்டு முதல் கார் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளோம். எதிர்காலங்களில் விலை அதிகரிக்காமல் இருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
கார்கள் விலை அதிகரிக்க உள்ளதால் பலரும் டிசம்பர் மாதத்திற்குள் புதிய கார்களை வாங்குவது நல்லது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“Meftal மாத்திரையை பயன்படுத்தாதீங்க” : மருந்தியல் ஆணையம் சொல்வது என்ன?
மழை பாதிப்புக்கு திமுக அரசே பொறுப்பு: எடப்பாடி தாக்கு!