விஜய் மக்கள் இயக்கத்தின் செயல்களைப் பாராட்டி கனடா மேயர் மரியன் மிட்வார்ட் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஜய் மக்கள் இயக்கம் மூலம் விஜய் ரசிகர்கள் ரத்த தான முகாம் போன்ற சமூக பணிகளைச் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் கனடாவில் விஜய் மக்கள் இயக்கம் மூலம் நடைபெற்று வரும் ரத்த தான முகாம், உணவு வழங்குதல் போன்ற சமூக நலப்பணிகளைப் பாராட்டி கனடாவின் பர்லிங்டன் நகர மேயர் ‘மரியன் மிட்வார்ட்’ என்பவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோ பதிவில், ”அனைவருக்கும் வணக்கம், நான் பர்லிங்டன் மேயர் மரியன் மிட்வார்ட். நான் கோலிவுட் நடிகர் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் கனடா ரசிகர் மன்றத்திற்குப் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ரசிகர் மன்றம் மூலம் நடைபெற்று வரும் ரத்த தானம், உணவு வழங்குதல் போன்ற சமூக நலப்பணிகளைச் சிறப்பாக செயல்படுத்தி வருகிறீர்கள்.
இந்த நல்ல வேலையைத் தொடர்ந்து செய்ய வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்” என்று பேசியுள்ளார்.
கனடா மேயரின் இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
மோனிஷா
அதிமுக பொதுக்கூட்டம்: காவல்துறைக்கு உத்தரவு!
விஜய் சேதுபதியை அசர வைத்த லைகா- பஞ்சாயத்துகளுக்கு பொறுப்பேற்ற ரெட் ஜெயன்ட்