ஹெல்த் டிப்ஸ்: டாய்லெட்டில் சிகரெட்டை புகைத்தால்தான் மலம் கழிக்க முடியுமா?

Published On:

| By Selvam

இன்றைக்கும் பலர் சிகரெட்டை புகைத்தால்தான் மலம் கழிக்க முடியும் என்று நினைத்துக்கொண்டு காலங்காலமாக அதைப் பின்பற்றுகிறார்கள். இன்றைய சூழ்நிலையில் செல்போன் பார்த்தால்தான் மலம் கழிக்க முடியும் என்கிற பழக்கமும் அதிகரித்து வருகிறது. “ஆனால், இந்த இரண்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என பல ஆய்வுகள் சொல்கின்றன. அது அவர்களது பழக்கம், அவ்வளவுதான்” என்கிறார்  இரைப்பை நோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர்.

“அதே போன்றதுதான் செரிமானத்துக்காக சோடா குடிப்பதும், பீடா மெல்லுவதும், சுயமாக மருந்துகள் எடுத்துக்கொள்வதும்கூட. அப்படி சுயமாக வைத்தியம் செய்து கொண்டால், ஜீரண மண்டலம் தொடர்பான பல பிரச்சினைகள் மனம் சம்பந்தப்பட்டவையாக மாறும்.

உதாரணத்துக்கு, முக்கியமான முடிவை எதிர்பார்த்துச் செல்லும்போது வயிறு கலக்கும், அடிக்கடி மலம் கழிக்கும் உணர்வு ஏற்படும். இதற்கு முக்கிய காரணமே அந்த முடிவு குறித்த பயமும் கவலையும்தான்.

வேலைக்குச் செல்லும் பரபரப்பில் இருக்கும் சிலருக்கும் வேலை நாள்களில் இந்த உணர்வு ஏற்படும். அதுவே விடுமுறை நாள்களில் நார்மலாக இருப்பார்கள். வேலையிடம், சக ஊழியர்கள் குறித்த கவலை, ஸ்ட்ரெஸ் போன்றவைதான் இதற்கு காரணம்.

வேளாவேளைக்கு, சத்தான, சரிவிகித உணவுகளைச் சாப்பிடுவோருக்கு குடல், இரைப்பை தொடர்பான பிரச்சினைகள் வராது. அந்த ஒழுக்கம் மீறப்படும்போதுதான் செரிமான பாதிப்புகள் வருகின்றன. பசியின்மை, நெஞ்செரிச்சல், வயிற்று உப்புசம், வாய்வு வெளியேறுவது, வயிற்றுப்போக்கு என செரிமானம் தொடர்பான எந்த அறிகுறியையும் அலட்சியப்படுத்தக் கூடாது… சுயமாக மருத்துவமும் பார்த்துக்கொள்ளக் கூடாது.

அதேபோல் டாய்லெட்டில் சிகரெட் பிடித்தால்தான் மலம் கழிக்க முடியும் என்கிற பழக்கத்தையும், செல்போன் பார்க்கும் பழக்கத்தையும் மாற்றிக்கொள்வது நல்லது” என்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லிஸ்ட் இன்னும் நெறைய இருக்கு : அப்டேட் குமாரு

இயக்குனர் மோகன் ஜி கைது : தலைவர்கள் ரியாக்சன்!

6 வயது சிறுமியை நம்பி காரில் அனுப்பிய தாய்… தலைமை ஆசிரியர் உருவில் இருந்த கயவன்!

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி : எங்கெங்கு மழை?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share