பன்னிரெண்டு கிலோ பாகுபலி சமோசாவை அரை மணி நேரத்தில் சாப்பிட்டால் ரூ.71,000 பரிசு வழங்கப்படும் என்று அறிவிப்பு தற்போது பலரையும் கவர்ந்துள்ளது.
இந்தியாவில் சமோசாக்களுக்கு என்றுமே கிராக்கி தான். மேலும் இப்போது சமோசாவே இல்லாத டீக்கடை, பேக்கரிகளே இல்லை என்ற நிலையே நாட்டின் பல இடங்களில் உள்ளது.
அதே வேளையில் சமோசா விற்பனைக்கு என்றே பிரத்யேகமாக கடைகளும் தொடங்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் உருவான ஒரு கடை தான், உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் பகுதியில் உள்ள லால்குர்தியில் கெளஷல் ஸ்வீட்ஸ் என்ற பெயரில் பேக்கரி.
அதன் உரிமையாளரான சுபம் கௌஷல் தனது கடை சமோசாவை வெளிச்சத்திற்கு வெளிக்கொண்டு வரும் வகையில், வித்தியாசமான முடிவை எடுத்துள்ளார்.
அதன்படி, தனது கடையில் தயாரிக்கப்படும் 12 கிலோ சமோசாவை அரை மணி நேரத்தில் சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு ரூ.71,000 பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
ரூ.1500 மதிப்புடைய ‘பாகுபலி சமோசா’ என்று அழைக்கப்படும் இந்த பிரம்மாண்ட சமோசா உருளைக்கிழங்கு, பட்டாணி, பனீர், உலர்பழங்கள் ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படுகிறது.
பார்க்கும்போது நாக்கில் எச்சில் ஊற வைக்கும் சமோசாவை 30 நிமிடத்தில் சாப்பிடுவர்களுக்கு தான் ரூ.71 ஆயிரம் பரிசு அறிவித்துள்ளார் சுபம் கெளஷல்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ”எங்களது தொழிலை பிரபலம் செய்யும் வகையிலும், புதிய வாடிக்கையாளர்களை கவரும் நோக்கிலும் இதை முன்னெடுத்துள்ளேன். ஆனால் இதுவரை இந்த சமோசா சாப்பிடும் சவாலில் யாரும் வெற்றி பெறவில்லை. அதிகபட்சமாக வாடிக்கையாளர் ஒருவர் சுமார் 9 கிலோ சமோசாவை 25 நிமிடங்களில் சாப்பிட்டு இருப்பதே இதுவரை நடந்துள்ள சாதனையாக உள்ளது” என்கிறார்.
மேலும், இந்த வித்தியாசமான போட்டியினால் கடையில் சமோசா விற்பனை அதிகரித்துள்ளது. பலரும் தங்களது பிறந்தநாள், திருமண நாள் போன்ற வீட்டு நிகழ்வுகளுக்கு இந்த பாகுபலி சமோசாவை ஆர்டர் செய்து மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர். இதுவரை சுமார் 50 பாகுபலி சமோசாக்கள் ஆர்டரின் பேரில் தயாரித்து வழங்கியுள்ளோம்” என்கிறார் சுபம் கெளசல்.
சரி மக்களே உத்தரபிரதேசத்திற்கு போவோமா???
கிறிஸ்டோபர் ஜெமா
ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப்: வரலாற்று சாதனைப் படைத்த தமிழ் பெண் பவானி தேவி
சென்னை மழை… ’மக்களுக்கு பாதிப்பு இல்லை’- அமைச்சர் சேகர் பாபு