நம் முகம், கழுத்து போன்ற இடங்களில் இருக்கும் அழுக்கை நீக்க க்ளென்சர் அவசியம்.
“காலையில் மேக்கப் போடுவதற்கு முன்பு அல்லது வெளியில் கிளம்புவதற்கு முன்பு க்ளென்சர் உபயோகிப்பது நல்லது. முக்கியமாக வெளியில் சென்று வந்த பிறகு க்ளென்சிங் செய்வது இன்னும் நல்லது. வெளியில் சென்று வந்த பிறகு நம் சருமத்தில் நிறைய அழுக்குகள் சேர்ந்திருக்கும். நம் உடலிலும் வியர்வை, எண்ணெய்ப்பசை போன்றவை உருவாகியிருக்கும்.
எனவே, இரவில் க்ளென்சிங் செய்வதை தினசரி வேலைகளில் ஒன்றாக வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். சருமம் ஆரோக்கியமாகவும், பளிச்சென்ற தோற்றத் துடனும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் இரவு நேரத்தில் முதல் வேலையாக க்ளென்சிங் செய்ய முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
நார்மல் க்ளென்சிங் லோஷன், க்ளென்சிங் மில்க், க்ளென்சிங் க்ரீம், க்ளென்சிங் ஆயில் என பலவிதங்களில் இருக்கின்றன. இவற்றை நம் சருமத்தின் தன்மை என்னவென்று அறிந்து கொண்ட பிறகு, நம் சருமத்துக்கேற்ற க்ளென்சரை உபயோகிக்கலாம்.
ஒரே க்ளென்சர் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானது அல்ல. பெண்களின் சருமம் வேறு. ஆண்களின் சருமத்தின் தன்மை வேறு. அதனால் இரு தரப்புக்கும் பயன்படும் க்ளென்சரும் வேறு வேறு.
ஒருவேளை பெண்களின் க்ளென்சரை ஆண்கள் உபயோகித்தாலும் அதனால் ஒன்றும் பெரிய தவறு இல்லை. ஆனால், ஆண்களின் சருமம் சற்று தடிமனாக இருக்கும். அதனால் ஆண்களுக்கென பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் க்ளென்சரை பயன்படுத்துவது இன்னும் சிறப்பு. அதேநேரம் ஆண்களின் க்ளென்சரை பெண்கள் உபயோகிக்கக் கூடாது என்று அழகுக்கலை நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : எம்.ஜி.ஆர் நினைவு நாள் முதல் அல்லு அர்ஜூன் ஆஜர் வரை!
கிச்சன் கீர்த்தனா : ப்ளம் கேக்
சடலத்துடன் உறவு கொண்டால் பாலியல் வன்கொடுமை கிடையாது- சட்டீஸ்கர் நீதிமன்றம் சொன்னது என்ன?
விஜய் கட்சியில் கோஷ்டி பூசல்? – அரியலூரில் தவெக கொடியை இறக்கிய பின்னணி!