பியூட்டி டிப்ஸ்: தினமும் சன்ஸ்க்ரீன் பயன்படுத்துபவரா நீங்கள்?

டிரெண்டிங்

சன்ஸ்க்ரீனை தினமும் பயன்படுத்துபவரா நீங்கள்? மாறிவரும் பருவ நிலையில் சன்ஸ்க்ரீனை தொடர்ந்து பயன்படுத்தலாமா? சரும மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?

“எந்த சீசனாக இருந்தாலும், சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவதில் தவறில்லை. வெயில் தகிக்கும் கோடைக்காலத்தில், சன்ஸ்க்ரீன் கட்டாயம் தேவை. ஆனால், வியர்வை வழியும் இந்தக் கோடையில் சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவது என்பது நம்மில் பலருக்கும் அசௌகர்யமாக இருக்கும்.

மேலும், சன்ஸ்கிரீன் யாருடைய சருமத்துக்கும் சட்டென செட்டாகி விடாது. ஏனென்றால், ஒவ்வொருவரின் முகச் சருமமும் சன்ஸ்க்ரீனுக்கு ஒவ்வொரு விதமாக ரியாக்ட் செய்யும்.

எனவே, உங்களது சருமம் எண்ணெய்ப்பசைத் தன்மையுடன் இருந்தாலும் சரி, டிரையாக இருந்தாலும் சரி, மாறுபட்ட பருவநிலைக்கு ஜெல் வடிவத்தில் கிடைக்கும் சன்ஸ்க்ரீனை தேர்ந்தெடுப்பது நல்லது.

இப்போதெல்லாம் வாட்டர் பேஸ்டு ஜெல் சன்ஸ்க்ரீன் (Water based gel sunscreen) கிடைக்கிறது. இதை முகத்தில் அப்ளை பண்ணும்போது மிகவும் லைட்டாக இருக்கும்.

இந்த ஜெல் சன்ஸ்க்ரீன், முகத்தில் வெள்ளை நிறத் திட்டுகளையும் ஏற்படுத்துவது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. சன்ஸ்க்ரீன் ஒருவருக்கு செட் ஆவது என்பது, முயன்று பார்த்து கண்டு கொள்ளும் (Trial and Error) அடிப்படையிலேயே அமையும். அப்படி ஒவ்வொன்றாக முயன்று பார்த்து, எந்த சன்ஸ்க்ரீன் செட் ஆகிறதோ அதையே தொடருங்கள்.

முகத்தைக் கழுவிய பிறகு, முதலில் மாய்ஸ்ச்சரைஸர் பயன்படுத்துங்கள். பின்னர், வெளியே கிளம்புவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னால் சன்ஸ்க்ரீனைப் போடுங்கள். இதுவே சரியான முறை. மாறாக, வீட்டிலிருந்து காலை வெளியே எடுத்து வைப்பதற்கு முன்பாக சன்ஸ்க்ரீன் போட்டுக்கொண்டு சென்றால் பலன் தராது.

சன்ஸ்க்ரீனை எடுத்து கைகளில் தேய்த்து, பின்பு முகத்தில் தடவாதீர்கள். உங்கள் முகத்துக்குத் தேவையான அளவுக்கு சன்ஸ்க்ரீனை எடுத்து, முகத்தில் புள்ளிகளாக வைத்து, லேசாகப் பரப்பி விடுங்கள். சன்ஸ்க்ரீனை முகத்தில் போட்டுத் தேய்க்கக் கூடாது’’ என்கிறார்கள் சரும மருத்துவர்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டிஜிட்டல் திண்ணை: மோடி பிரதமர் ஆக மாட்டார்… ஆர்.எஸ்.எஸ்.சின் அடுத்த பிளான்!

கடவுளின் தூதரா மோடி? ஆ.ராசா பளிச் பதில்!

பூரி ஜெகன்நாதர் கோயிலில் உள்ள மர்மம் என்ன? யார் அந்த தமிழர் வி.கே.பாண்டியன்?

”ஆர்சிபி ஃபைனல் வருவதை கொல்கத்தா விரும்பாது” – வருண் ஆரோன்

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *