ஹெல்த் டிப்ஸ்: ஆங்கில மருந்துடன் சித்த மருந்துகளும் எடுக்கலாமா?

Published On:

| By Minnambalam Desk

சிலருக்கு ரத்த அழுத்தம், ஆஸ்துமா, சர்க்கரை நோய் என பல பிரச்சினைகள் இருக்கும். எல்லாவற்றுக்கும் ஆங்கில மருந்துகள் எடுத்து வருபவர்கள், உடல்நலம் பாதிக்கப்படும்போது சில நேரத்தில் ஆங்கில மருந்துகளை நிறுத்திவிட்டு, சித்த மருந்துகள், ஆயுர்வேத மருந்துகளையும் எடுத்துக் கொள்வார்கள்.

இப்படி ஒரு பிரச்சினைக்கு அலோபதி, சித்தா, ஆயுர்வேத மருந்துகளை மாற்றி மாற்றி எடுப்பது எந்த அளவுக்குச் சரியானது? பொதுநல மருத்துவர்கள் சொல்லும் விளக்கம் இதோ…

ஆங்கில மருந்துகளுக்கு பக்க விளைவுகள் உண்டு என்பதுதான் உண்மை. அதனால்தான் அலோபதி மருந்துகளைப் பரிந்துரைக்கும்போது சில மருந்துகளை சாப்பாட்டுக்கு முன், சிலவற்றை சாப்பாட்டுக்குப் பின் என குறிப்பிட்ட கால இடைவெளியில் எடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். Can we Use Ayurveda with Allopathic

எந்தப் பிரச்னைக்கும் ஆரம்பகால சிகிச்சையாக வேண்டுமானால் சித்தா, ஆயுர்வேத மருந்துகளை எடுக்கலாமே தவிர, நோயின் தீவிர நிலையில் அவை உதவாது. படித்த, அனுபவம் வாய்ந்த மாற்று மருத்துவர்களும் தங்கள் நோயாளிகளுக்கு அதைத்தான் அறிவுறுத்துவார்கள்.

உதாரணத்துக்கு, சர்க்கரை நோயும், ரத்த அழுத்தமும் தீவிரமாகும்போது, மாற்று மருத்துவர்களே, அலோபதி மருத்துவர்களைப் பார்க்கவே அறிவுறுத்துவார்கள்.

மாற்று மருத்துவத்தில் தீவிர நோய்களை குணப்படுத்த முடியும் என்றால் எஃப்.டி.ஏவே அந்த மருத்துவ முறைகளை அங்கீகரித்திருக்குமே…. Can we Use Ayurveda with Allopathic

உலக சுகாதார நிறுவனமும் உலகம் முழுவதும் அந்த மருந்துகளை விற்பதற்கு ஒப்புதல் கொடுத்திருக்கும்.

பொதுவாக சித்தா, ஆயுர்வேத மருந்துகளில் உலோக கலப்பு அதிகமிருக்கும் என்பதும், அவை ஏற்புடையவையல்ல என்பதும் அலோபதி மருத்துவர்களின் கருத்து.

எனவே, நோய்களுக்கு அவற்றின் தீவிரத்துக்கேற்ப அலோபதி மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை பெறுவது தான் சரியானது” என்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share