பியூட்டி டிப்ஸ்: எட்டிப்பார்க்கும் நரை முடியைப் பிடுங்காதீர்கள்!

டிரெண்டிங்

‘ஒரு நரைமுடியைப் பிடுங்கினா, பக்கத்துல உள்ள முடிகளும் நரைத்துவிடும்’ என்றொரு நம்பிக்கையும் காலங்காலமாக பலரிடம் இருக்கிறது. இது எந்த அளவுக்கு உண்மை? கூந்தல் சிகிச்சை மருத்துவர்கள் தரும் விளக்கம் என்ன?

ஒரு நரைமுடியைப் பிடுங்கினால் அதன் பக்கத்திலேயே நிறைய நரைமுடிகள் வரும் என்று சொல்லப்படுவது தவறான நம்பிக்கை.

நரை முடியைப் பிடுங்கி எறிவதால் தற்காலிகமாக அந்தப் பிரச்னை நம் கண்களில் இருந்து மறையும். அதனால் ஒருவித நிம்மதியை உணர்வோம்.

மற்றபடி, பிடுங்கிய இடத்தில் ஃபாலிக்கிள் எனப்படும் வேர்க்கால் உயிர்ப்புடன்தான் இருக்கும். அதனால் அதே இடத்தில் மீண்டும் ஒரு வெள்ளை முடி புதிதாக முளைக்கும்.

பலரும் இது புரியாமல், நரையைப் பார்த்ததும் அதைப் பிடுங்கி எறிகிறார்கள். பிடுங்கி எறிந்த சில நாள்களில் மீண்டும் அதே இடத்தில் இன்னொரு வெள்ளை முடி வளரும், அதையும் பிடுங்கி எறிவார்கள்.

தொடர்ந்து இப்படிச் செய்வதால் குறிப்பிட்ட காலத்தில், அந்த இடத்தில் முடி வளர்வதே முற்றிலும் நின்றுபோகும்.

அதாவது, பிடுங்கிய இடத்தில் வெள்ளை முடி இல்லை என்ற நிலை மாறி, அந்த இடத்தில் முடியே இல்லை என்ற நிலை வரும். மற்றடி, ஒரு முடியைப் பிடுங்குவதால், அதன் வேர்க்கால், அருகிலுள்ள முடிகளின் வேர்க்கால்களை எந்த வகையிலும் பாதிக்காது.

ஒரு முடியின் வேர்க்கால்களைச் சுற்றியுள்ள பிக்மென்ட் எனப்படும் நிறமி செல்கள் செயலிழக்கும்போதுதான், கறுப்பான முடி, வெள்ளையாக மாறுகிறது. அப்படி நிறமி செல்கள் இல்லாமல் போகும் நிலையில், அந்த இடத்தில் அடுத்தடுத்து முளைக்கும் முடிகளும் வெள்ளையாகத்தான் இருக்கும்.

கூந்தல் நரைப்பதை யாராலும் தடுக்க முடியாது. நரை தோன்றும் காலம் வேண்டுமானால் நபருக்கு நபர் வேறுபடலாம். ஒன்றிரண்டு நரை தென்பட ஆரம்பிக்கும்போது அது பற்றி பெரிதாக கவலைப்படத் தேவையில்லை. அதை மறைக்க கலரிங் செய்யத் தேவையும் இல்லை.

அதுவே, நரை அதிகமாகும்பட்சத்தில், அதை மறைக்க ஹென்னாவோ, கெமிக்கல் இல்லாத ஹேர் கலரோ பயன்படுத்தலாம்” என்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹெல்த் டிப்ஸ்: டயட் இருக்க விரும்புகிறீர்களா… உங்களுக்கு ஏற்றதுதானா?

டாப் 10 நியூஸ் : சீன அதிபர் – பிரதமர் மோடி சந்திப்பு முதல் ‘அமரன்’ ட்ரெய்லர் ரிலீஸ் வரை!

கிச்சன் கீர்த்தனா : மினி பெப்பர் தட்டை

“சிறு மழைக்கே தாக்குப்பிடிக்காத சென்னை” – எடப்பாடி சுளீர்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *