நிறைய பேர் இரவு உணவுக்குப் பிறகு 10 மணிக்கு ஒரு டீ குடித்துவிட்டுப் படுக்கச் செல்கிறார்கள். டீ, காபி குடிப்பதே நமது மூளையைச் சுறுசுறுப்பாக வைக்க உதவும் அதில் உள்ள கபீன் (caffeine) என்ற ரசாயனத்துக்காகத்தான்.
பொதுவாக இரவு தூக்கம் கெடாமல் இருக்க, மாலை 6 மணிக்கு மேல் டீ அல்லது காபியைத் தவிர்க்க வேண்டும். இந்த நிலையில் இரவு படுக்கைக்குச் செல்லும் நேரத்தில் டீ அல்லது காபி குடிப்பது தூக்கத்தை பாதித்து, இரவு நீண்ட நேரம் விழிப்பு வரச் செய்து அடுத்த நாள் காலை எழுந்தவுடன் சோர்வைத் தரும்.
டீ அல்லது காபியின் விளைவாக நீங்கள் இரவில் விழித்திருந்தால் பிறகு சில பிஸ்கட்களும் சிப்ஸ்களும் கூடவே உள் சென்று உடல் பருமனையும் சர்க்கரை நோயையும் வரவழைக்கும். அதனால் இதைத் தவிர்ப்பது நல்லது.
இரவு நேரப் பணி செய்பவர்கள் வேண்டுமானால் 10 அல்லது 11 மணிக்கு ஒரு டீ அல்லது காபி குடிக்கலாம். ஆனால் அவர்களும்கூட நள்ளிரவு இரண்டு, மூன்று மணி போன்ற நேரங்களில் டீ, காபி குடித்தால் அடுத்த நாள் காலையும் தூக்கம் வராமல் உடலின் செயல்பாடுகள் பாதித்துவிடும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : ராஜ்மா புளிக்குழம்பு
டெல்லியில் இருந்து வந்தாலும், லோக்கலில் இருந்து வந்தாலும்… விஜய்யை விமர்சித்த உதயநிதி