கோடையை நோக்கி நகரும் சூழலில், ‘காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் மோர் அல்லது நீராகாரம் குடிப்பது உடலுக்கு நல்லது. இதன் மூலம் உடல் குளிர்ச்சியும், தெம்பும் கிட்டும்’ என்கின்றனர் பொதுநல மருத்துவர்கள். ஆனால், சளி இருப்பவர்கள் மோர் குடிக்கக் கூடாது என்று சொல்கிறார்களே… இது உண்மையா? Can we drink buttermilk in Cold
தயிரில் இருந்து தயாரிக்கப்படும் நீர்ச்சத்து நிறைந்த புரோபயாடிக் உணவுதான் மோர். பாலில் உள்ள எல்லாச் சத்துகளும் மோரிலும் உள்ளன. இரண்டு வயதுக்கு மேல் எல்லா வயதினருக்கும் எந்த நேரத்திலும் அருந்துவதற்கு ஏற்ற பானம்தான் மோர். இது உடலுக்குக் குளிர்ச்சியைத் தருகிறது.
கோடைக்காலத்தில் வாய் வறட்சியைப் போக்குகிறது. வயிற்றுப்போக்கு, வயிற்று எரிச்சல், அல்சர், அஜீரணம் போன்ற பல வயிற்று நோய்களுக்கு மோர் ஓர் அருமருந்து. காய்ச்சல், சளி இருப்பவர்கள் மோர் குடிக்கக் கூடாது என்று சொல்வார்கள். இது முற்றிலும் தவறு. மோரில் கலக்கப்படும் தண்ணீர் சுத்தமாக இருந்தால் காய்ச்சல், சளி வராது.
“சித்த மருத்துவ முறையில் பல மருந்துகள் மோரில் கலந்து கொடுக்கப்படுவது நடைமுறையில் உள்ளது. ஆக, வெயில் காலத்துக்கு மட்டுமின்றி எக்காலத்துக்கும் ஆரோக்கியத்துக்கு ஏற்ற எளிமையான பானம்தான் மோர்” என்கின்றனர் சித்த மருத்துவர்கள். Can we drink buttermilk in Cold