தேங்காய் எண்ணெய் தடவலாம்… இது அனைத்து வயதினருக்கும் ஏற்றது. பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் தடவலாம். இவை முடிக்கு பிரகாசம் மற்றும் மென்மையைச் சேர்க்கும்.
தலையில் எண்ணெயைத் தடவுவதற்கு முன் நீங்கள் தேய்க்கும் எண்ணெயை சிறிது சூடாக்கி தடவவும்.. வெதுவெதுப்பான எண்ணெய் முடியின் வேர்க்கால்களில் அதிகமாக ஊடுருவ உதவும்.
உங்கள் உச்சந்தலையில் எண்ணெய் தடவி, வட்ட வடிவில் உங்கள் விரல் நுனியில் மெதுவாக மசாஜ் செய்யவும். இது ரத்த ஓட்டத்தைத் தூண்டும். உடலுக்குப் புத்துணர்ச்சித் தரும்.
குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்கு உங்கள் தலைமுடியில் எண்ணெய் இருக்கட்டும். இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு காலையில் எழுந்தும் தலைக்குக் குளிக்கலாம்.
எண்ணெயைக் கழுவ மிதமான ஷாம்பூவைப் பயன்படுத்தவும். முதலில் சிறிதளவு ஷாம்பூவைப் பயன்படுத்தி தலைமுடியை அலசவும். பிறகு தேவைக்கேற்ப பயன்படுத்தி மீதமுள்ள எண்ணெயை அகற்றவும்.
எண்ணெய் – ஷாம்பூ குளியலுக்குப் பிறகு தலைமுடியை அழுத்தமாகத் துடைக்க வேண்டாம். மிருதுவாக துவட்டினாலே போதும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : ஆம்ஸ்ட்ராங்க் உடலுக்கு இறுதி அஞ்சலி முதல் தோனி பிறந்தநாள் வரை!
ஹெல்த் டிப்ஸ்: நேரம் கடந்து சாப்பிடுபவரா நீங்கள்?
சண்டே ஸ்பெஷல்: சமையலுக்கு தினசரி தேங்காய் எண்ணெய் உபயோகிப்பது நல்லதா?
வாங்குற வாண்டி: அப்டேட் குமாரு