ஹெல்த் டிப்ஸ்: செக்ஸ் உறவை பாதிக்குமா… ஆண்களுக்கான கருத்தடை?

Published On:

| By Selvam

பாலியல் தொடர்பாக நிறைய மூட நம்பிக்கைகள் இருக்கின்றன. அதில் பிரபலமான ஒரு மூட நம்பிக்கைதான் ஆண்களின் கருத்தடை தொடர்பானது. இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று விதிவிலக்குகள் இல்லை.

இதுகுறித்து பாலியல் சிறப்பு மருத்துவர்கள் கூறுகையில், “ஆண்களுக்கு விரையில் அறுவை சிகிச்சை செய்யப்படும் என்பதால் ஆண்மைக் குறைவு வந்துவிடுமோ என்கிற அச்சம் இருக்கிறது. இதுபோல் பயம் வந்தாலே விறைப்புத்தன்மை வராது.

விறைப்புத்தன்மை பிரச்சினையின் பின்னால் பயம், பதற்றம் போன்ற உளவியல் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. இதே சந்தேகம் பெண்களுக்கும் இருக்கலாம்.

பெண்களுக்கான கருத்தடை ஆபரேஷன் என்பது வயிற்றுக்குள் செய்ய வேண்டியிருக்கும். அதில்  10,000 பெண்களில் ஒருவருக்கு  உயிராபத்து சூழலும்  வரலாம்.

ஆண்களுக்கு விரையில் செய்வதால் எந்தப் பிரச்சினையும் இல்லை. அது விரலில் செய்வது போலத்தான் என்பதால் உயிராபத்து இல்லை.

ஆண்களின் கருத்தடை இன்னும் எளிது. ஏனெனில் விரைக்கு மேலே விந்துக்குழாய் செல்கிறது. அந்த இடத்தில் அறுவை சிகிச்சை செய்வதும் எளிது. மருத்துவமனையில் அட்மிட் ஆக வேண்டியதில்லை. உடனே வீடு திரும்பலாம்.

அடுத்த நாளே வேலைக்கும் செல்லலாம். 10 – 15 நிமிடங்களில் ஆண்களுக்கு கருத்தடை சிகிச்சையைச் செய்துவிடலாம்.

கர்ப்பமடைவது பெண்களின் பொறுப்பு என்பதைப் போலவே கருத்தடையும் பெண்களின் வேலை என்ற மனநிலை உருவாகிவிட்டது. ஆனால், ஆண்கள் கருத்தடை செய்து கொண்டால் கணவரின் பாலியல் செயல்பாடு பாதிக்கப்படுமோ என்ற கவலையே வேண்டாம்.

வீட்டுக்காக வெளியில் சென்று சம்பாதிக்கிறவர், அவருக்கு எந்த சிறு அசௌகர்யமும் நடக்கக் கூடாது என்றும் நினைக்கலாம். ஆனால், இந்த அச்சமோ, குழப்பமோ தேவையே இல்லை”  என்கிறார்கள்.

கிச்சன் கீர்த்தனா: இஞ்சிப் பச்சடி

டாப் 10 நியூஸ்: மன்மோகன் சிங் மறைவு முதல் சென்னை புத்தகக் கண்காட்சி வரை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share