நம் அனைவரின் காதிலும் சிவப்பு நிறத்தில் மெழுகு போல ஒரு பொருள் சேகரமாகும். பிசுபிசுப்பான தன்மையுடன் இருக்கும் இதை அழுக்கு என்று நினைத்து `பட்ஸ்’ கொண்டு சிலர் நீக்கிக்கொண்டே இருப்பார்கள். பெரியவர்கள் மட்டுமல்லாமல் சில குழந்தைகளும் பட்ஸை வைத்துக் காதை குடைந்துகொண்டே இருப்பதை செய்கிறார்கள். Can pricking your ear cause hearing loss?
இது ஒருபுறம் இருக்க, இப்படி செய்வது சுகமாக இருக்கிறது என்று சொல்லி, எப்போது பார்த்தாலும் காதைக் குடைந்துகொண்டிருப்பவர்களும் உண்டு.
காதில் சுரக்கும் இந்த மெழுகு, மிகவும் நார்மலானது. இது தூசி, அழுக்கு மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இயர் கனால் பகுதியில் நுழைவதைத் தடுத்து காதுகளைப் பாதுகாக்கிறது. எனவே, இதை அழுக்கு என்று எண்ணத் தேவையில்லை.
வாயில் எப்படி எச்சில் (Saliva) எனும் திரவம் சுரக்கிறதோ, அதேபோலத்தான் இந்த மெழுகும். எனவே, இதை அப்நார்மலான விஷயமாக நினைத்து, தினமும் இதை பட்ஸ் கொண்டு சுத்தம் செய்ய வேண்டிய தேவையில்லை.
மாதம் ஒருமுறை பட்ஸ் கொண்டு லேசாக காதுகளைச் சுத்தம் செய்து கொள்ளலாம். அப்படியல்லாமல் தினமும் செய்தால், காது பாதிக்கப்படும். அதே சமயத்தில், இந்த வாக்ஸ் சேர்ந்து சேர்ந்து காதில் கொஞ்சம் அடைப்பிருப்பதுபோல உணர்ந்தால், ஓரிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை காது, மூக்கு, தொண்டை மருத்துவரிடம் சென்று இதை முறையாக க்ளீன் செய்துகொள்ளலாம்.
பெரும்பாலும் காது மெழுகானது தானாகவே வெளியில் வந்துவிடும். சில சமயங்களில் வராமல் போகலாம். அப்படி, காதில் சேரும் மெழுகை ஈஸியாக எடுக்க முடியாது. இதனால் சிலர், காதை சுத்தம் செய்வதாக நினைத்து, பட்ஸால் குடைந்து குடைந்து, அந்த மெழுகை செவிப்பறையின் மேலே தள்ளிவிடுவார்கள். அது மிகவும் இறுக்கமாகி நின்றுகொள்ளும். அப்போது காதுகள் அடைத்துக்கொண்டிருப்பது போன்ற உணர்வு இருக்கும்.
இதை `இம்பாக்டெட் இயர் வேக்ஸ்’ (Impacted Ear Wax) என்று சொல்கிறார்கள் காது, மூக்கு, தொண்டை மருத்துவர்கள். மேலும், “காதில் சொட்டு மருந்து செலுத்தி, உள்ளே இறுக்கமாக அடைத்துக்கொண்டிருக்கும் மெழுகை இலகுவாக்குவோம். பின்னர், அதை `எண்டோஸ்கோப்’ (Endoscope) என்ற கருவியின் மூலமாக, செவிப்பறை மற்றும் காதின் உட்பகுதிகள் பாதிக்காத வண்ணம் பொறுமையாக வெளியே எடுப்போம்” என்கிறார்கள்.
தொடர்ந்து “குழந்தைகளிடம், காதுகளைப் பாதுகாக்க வேண்டியது குறித்த விழிப்புணர்வைக் கொண்டுவர வேண்டியது மிக அவசியம். ஏனென்றால், அவர்கள்தான் பட்ஸ், பேனா, பென்சில், ஸ்கெட்ச், பேனாவின் பின்பகுதி மற்றும் கூரான பொருட்கள் போன்றவற்றைக் கொண்டு காதுகளை எப்போது பார்த்தாலும் விளையாட்டாகக் குடைந்துகொண்டே இருப்பார்கள்.
இப்படிச் செய்வதால் உண்டாகும் எதிர்மறை விளைவுகள் குறித்து அவர்களுக்குப் புரியும் மொழியில் அவ்வப்போது பேசுவது நல்லது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, பெரியவர்கள் என்ன செய்கிறார்களோ அவற்றைத்தான் குழந்தைகளும் நகலெடுப் பார்கள். எனவே, வீட்டிலிருக்கும் பெரியவர்கள் பட்ஸ் கொண்டு எப்போது பார்த்தாலும் காதை சுத்தம் செய்து கொண்டிருப்பதைக் கைவிட வேண்டும்” என்று அறிவுறுத்துகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: சிவப்பு முள்ளங்கி சட்னி
சீட் கிடைக்காதது கோபம்… மீண்டும் அதிமுகவுக்கு ஆதரவளித்த புரட்சி பாரதம்!
எதிர்க்கும் கூட்டணி கட்சி : பேரணியாக சென்று ராகுல்காந்தி வேட்புமனு தாக்கல்!
காமெடி சேனல்ல அரசியல் பேட்டி: அப்டேட் குமாரு
Can pricking your ear cause hearing loss?