தலை நரைக்கத் தொடங்கியதும் முதலில் பலரும் முயற்சி செய்வது கடைகளில் விற்கும் மருதாணிப்பொடி தடவுவதைத்தான். அந்தப் பொடியில் தார் தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் கெமிக்கல்களை பயன்படுத்துவார்கள். அப்போதுதான் அதன் நிறம் சட்டென ஒட்டிக்கொள்ளும் என்பதுதான் காரணம். அந்த ரசாயனங்கள் புற்றுநோயை ஏற்படுத்தும் அளவுக்கு அபாயமானவை. இதை அடிக்கடி உபயோகிப்பதால் முகத்தில் மங்கு பாதிப்பும் ஏற்படலாம்.
மேலும் அடிக்கடி ஹேர் டை பயன்படுத்தும் ஆண்களுக்கு வாயைச் சுற்றி புண்கள், நிற மாற்றம் இருப்பதைப் பார்க்கலாம். காரணம், மீசை, தாடிக்கெல்லாம் டை போடுவதுதான். எனவே, அமோனியா, பிபிடி இல்லாத ஹேர் கலர்களாக பார்த்து உபயோகிக்க வேண்டியது மிக அவசியம். அதற்கு பதிலாக வீட்டில் இயற்கையான பொருட்களை வைத்து தயாரிக்கப்படும் இந்த ஹேர் டையை பயன்படுத்தி, எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாமல் உங்கள் நரையை மறைக்கலாம்.
அவுரி பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடை க்கும். இயற்கையாக இது கருமை நிறத்தை தரும். இதை முடிகேற்ற அளவில் எடுத்து, சம அளவு புதிதாகப் பறித்த மருதாணி இலையுடன் அரைத்து தலையில் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து குளித்தால் முடி கருமை நிறத்தில் மாறும். பிறகு தலை முடியை சீயக்காய் அல்லது ஹெர்பர் ஷாம்பூ கொண்டு நன்றாக அலசிவிட்டு நன்றாக உலர்த்த வே ண்டும். ஹேர் டிரையரை பயன்படுத்தக் கூடாது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“தமிழ்நாட்டை பார்த்தால் நக்கலா?” : திருவண்ணாமலையில் மோடி, நிர்மலாவை விளாசிய ஸ்டாலின்
தமிழகத்தில் மின் நுகர்வு புதிய உச்சம்: தங்கம் தென்னரசு தகவல்!
இந்தியாவை விட சீனாவுக்கு முன்னுரிமை: நேரு மீது ஜெய்சங்கர் குற்றச்சாட்டு!