ஹெல்த் டிப்ஸ்: குதிகால் வலியுடன் வாக்கிங் போகலாமா?

டிரெண்டிங்

குதிகால் வலி என்பது வாழ்வியல் சார்ந்த ஒரு பிரச்சினையாக இருக்கிறது. நீண்ட நேரம் நிற்பது, வெறும் காலில் நிற்பது மற்றும் கடினமான பரப்பில் நிற்பது போன்றவற்றால் குதிகால் வலி வரும்.

வகுப்பறையில் நின்றுகொண்டே வகுப்பெடுக்கும் ஆசிரியர்கள், சமையலறையில் நின்றுகொண்டே வேலை பார்ப்பவர்கள், நீண்ட நேரம் நின்றுகொண்டே பணியாற்றும் டிராஃபிக் போலீஸ் போன்றோருக்கு பொதுவாக இந்த வலி வரும்.

நிற்கும்போது வலி இருக்காது. ஆனால், படுத்து எழுகையில் பாதத்தைக் கீழே வைக்கும்போதே வலி உண்டாகும். பின்னர் கொஞ்ச நேரம் நடந்தால் வலி சரியாகிவிடும்.

அதேபோல, நீண்ட நேரம் உட்கார்ந்து பின்னர் எழுந்திருக்கும்போது குதிகாலில் வலி உண்டாகும். சற்று நேரத்தில் வலி சரியாகும். இப்படி விட்டுவிட்டு வருகிற குதிகால் வலியானது, சிறிது நாட்கள் கழித்து என்ன செய்தாலும் போகாமல் தொடர்ந்து நீடிக்க ஆரம்பிக்கும்.

இந்தப் பிரச்சினையை மருத்துவ உலகம் ‘பிளான்டார் பேசிடிஸ்’ (Planter Fcascitis) என்று அழைக்கிறது.

நமது குதிகால் எலும்பில், சவ்வு மாதிரியான ஒரு தசைநார் வந்து சேரும். அந்த தசை நாருக்கு ‘பிளான்டார் பேசியா’ (Plantar fascia) என்று பெயர்.

சரியாக, நாம் குதிகாலை தரையில் ஊன்றுகிற அந்த இடத்தில்தான் பிளான்டார் பேசியா என்ற இந்தத் தசைநார் குதிகால் எலும்பில் வந்து சேர்ந்திருக்கும்.

எனவே, நாம் நீண்ட நேரம் நின்றுகொண்டே இருக்கும்போது, மென்மையாக இருக்கும் அந்தப் பிளான்டார் பேசியா திசுக்கள் கடினமாகி எலும்பு வளர்ச்சியடைந்திருப்பது போல கடினமாக மாறிவிடும். இதனால், குதிகால் வலி உண்டாகும்.

இந்த நிலையில் குதிகால் வலி உள்ளவர்கள் வாக்கிங் போகலாமா என்கிற சந்தேகம் வரும். தாராளமாகப் போகலாம். ஆனால், மென்மையான ஹீல் உள்ள ஸ்போர்ட்ஸ் வேர் ஷூக்களைப் பயன்படுத்தி வாக்கிங் போக வேண்டியது அவசியம்.

இப்படி முறையான ஷூக்களை வாங்கினாலே பாதி கால் வலி சரியாகிவிடும். உடற்பருமன் ஏற்பட்டால் அதனாலும் குதிகால் வலி உண்டாக வாய்ப்புள்ளது என்பதால், உடற்பருமனைக் குறைப்பதன் மூலமும் இந்தக் குதிகால் வலி பிரச்சினையை சரி செய்ய முடியும்.

அடுத்து, நீண்ட நேரம் நிற்பதைத் தவிர்த்திடுங்கள். வீட்டுக்குள்ளும் வெளியிலும் நடப்பதற்கு மிருதுவான செருப்பைப் பயன்படுத்துங்கள்.

ஷூ பயன்படுத்துபவர்கள் சிலிக்கோன் ஷூ ஹீல் பேட் (Silicone Shoe Heel Pad) எனப்படும் சாஃப்டான PAD ஒன்றை வாங்கி ஷூக்களுக்குள் வைத்துக்கொள்ளலாம்.

உங்களுக்கு பிளான்டார் பேசிடிஸ் பிரச்னை இருந்தால், மருத்துவரின் ஆலோசனையின்படி வலியைக் குறைக்க பிசியோதெரபி போன்ற சிகிச்சையை எடுத்துக்கொள்ளுங்கள்.

குதிகால் வலி குறைந்ததும் பிளான்டார் பேசியா தசைகளை வலிமையாக்க, கீழ்க்காணும் வழிமுறையைப் பின்பற்றுங்கள்.

ஒரு டப்பில் வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்து அதில் உப்பைச் சேருங்கள். பின்னர், அதில் கர்ச்சீப் ஒன்றைப் போட்டுவிடுங்கள். உங்களின் ஒவ்வொரு பாதத்தில் உள்ள விரல்களாலும் கர்சீப்பைப் பிடித்துப் பிடித்து பின்னர் விடுங்கள்.

இப்படி, உங்கள் இரண்டு பாதங்களின் விரல்களாலும் கர்ச்சீப்பைப் பிடித்துப் பிடித்து விடும்போது குதிகாலில் உள்ள பிளான்டார் பேசியா தசைகள் வலிமையாகும். வலியில்லாமல் வாக்கிங் போகலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அமெரிக்கா பயணத்திற்கு பின் அமைச்சரவை மாற்றமா? ஸ்டாலின் ‘நச்’ பதில்!

இது என்னடா வித்தியாசமான உருட்டா இருக்கு? அப்டேட் குமாரு

மதுபான வழக்கு… கவிதாவுக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம்!

முருகன் மாநாடு: சேகர்பாபுவை விமர்சித்த கி.வீரமணி

Can I go walking with heel pain?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *