ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா போன்ற 4ஜி, 5ஜி சேவைகள் வழங்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இருக்கும் வாடிக்கையாளர்களைப் போலவே, இன்னும் 4ஜி சேவை கூட தொடங்காத பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்-க்கும் இருக்கிறார்கள்.
4ஜி சேவை தொடங்கப்படாமல் இருந்தாலும்கூட குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்கள், அதிகமான இடங்களில் தடையில்லா சேவை போன்ற காரணங்களுக்காக வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்தை விடாமல் பிடித்து வைத்திருக்கிறார்கள்.
ஆனால் இப்போதோ பிஎஸ்என்எல் நிறுவனம் தனது குறிப்பிட்ட ரீசார்ஜ் திட்டத்திற்கு அன்லிமிடெட் டேட்டாவை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம் இதுவரை வழங்கிவந்த இரவு முழுவதும் அன்லிமிடெட் டேட்டா திட்டமானது குறிப்பிட்ட ரீசார்ஜ் பிளானிற்கு இனி கிடையாது என அறிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு நேரத்தில் அறிமுகம் செய்யப்பட்ட, வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்த ரூபாய் 599 ரீசார்ஜ் திட்டத்திற்குத் தான், இந்த அறிவிப்பினை பிஎஸ்என்எல் வெளியிட்டுள்ளது.
இத்திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டி, நாளொன்றுக்கு 3ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகள் அடங்கும். கூடுதலாக Astrocell, Zing, PRBT போன்றவைகளும் இணைந்தே வரும்.
இதன் சிறப்பாகப் பார்க்கப்பட்டது என்னவென்றால் பகல் முழுவதும் 3 ஜிபி கிடைக்கும். ஒருவேளை டேட்டா தீர்ந்துவிட்டாலும் 40kbps வேகத்தில் டேட்டாவை தொடர்ந்து பயன்படுத்த முடியும். அதுமட்டுமில்லாமல் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை அன்லிமிடெட் டேட்டா சேவை கிடைக்கும்.
இந்த சேவையானது அனைத்து தரப்பினருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தற்போது இந்த சேவை நிறுத்தப்படுவது பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு வருத்தம் அளிக்கக்கூடிய விஷயமாக மாறியுள்ளது.
-பவித்ரா பலராமன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Box Office: ஜனவரி, பிப்ரவரியில் வெளியான படங்களின்… பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!