அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், மற்ற டெலிகாம் நிறுவனங்களை விட மலிவான ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது.
நீங்கள், ஒரு வருட வேலிடிட்டி கொண்ட 365 நாட்கள் செல்லுபடியாகும் மலிவான ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேடுகிறீர்கள் என்றால், இந்த சிறப்பு செய்தி உங்களுக்கானது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஒரு வருட கால ப்ரீபெய்ட் திட்டத்தைப் பற்றி இன்று தெரிந்துகொள்வோம்.
இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி டேட்டா, குரல் அழைப்பு, எஸ்எம்எஸ் உட்பட பல நன்மைகள் கிடைக்கும்.
அதேபோல ஜியோ நிறுவனமும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 365 நாட்கள் செல்லுபடியாகும் திட்டத்தை வழங்கி வருகிறது.
இந்த இரண்டு திட்டங்களையும் ஒப்பிட்டு, தங்களுக்கு எது சிறந்த திட்டம், எந்த நிறுவனத்தின் திட்டம் அதிக நன்மைகளை வழங்குகிறது என்பதைப் பார்த்து, எந்த திட்டத்தை வாங்க வேண்டும் என்பதைத் தாங்களே தீர்மானித்துக்கொள்ளலாம்.
பிஎஸ்என்எல் மற்றும் ஜியோவின் ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மைகள் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த ரூ.1,570 திட்டமானது ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. மேலும், இந்த திட்டத்தில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகள் கிடைக்கும்.
இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். அதே நேரத்தில், இந்த திட்டத்தில் அதிவேக டேட்டா வரம்பு முடிந்த பிறகு, வரம்பற்ற டேட்டாவை 40Kbps வேகத்தில் பயன்படுத்தலாம்.

அதேநேரத்தில், ஜியோவின் ரூ.2,879 திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கிறது, அதாவது 730ஜிபி. அதிவேக டேட்டா வரம்பு முடிந்ததும், 64Kbps வேகத்தில் வரம்பற்ற டேட்டாவைப் பயன்படுத்தலாம். இந்த திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது.
இந்த திட்டம் வரம்பற்ற இலவச குரல் அழைப்பு நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ்களை இலவசமாக அனுப்பலாம்.
இந்த இரண்டு திட்டங்களை ஒப்பிட்டு எந்த திட்டம் உங்களுக்கு சிறந்ததாக இருக்கிறதோ, அந்த திட்டத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
பிரச்சினையை கிளப்பிய தீபிகா படுகோனின் பிகினி உடை!
போக்குவரத்துக்கு இடையூறு : யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது வழக்குப்பதிவு!